ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷ்ரமாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு நல்ல தொடக்கமாக அமையவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் 11 ரன்களில் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் போல்ட்டானார். முதலிரண்டு பந்துகளை அவுட் ஸ்விங் வீசிய ஷாகின் அப்ரிடி மூன்றாவது பந்தை இன் ஸ்விங் செய்தார். இதனால் பந்து ஆஃப் ஸ்டெம்பை பதம் பார்த்தது.
இதனால் ரோகித் ஷர்மா 11 ரன்களில் நடையைக் கட்டினார். அவர் ஆட்டமிழந்த விதம் சென்னை 28 படத்தில் மிர்ச்சி சிவா ஆட்டமிழந்ததை போல் இருந்ததாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் உலா வந்தன. ஏற்கனேவே ரோகித் ஷர்மா பார்ப்பதற்கு மிர்ச்சி சிவா போல் இருக்கிறாரே என்ற கலாய்த்து வரும் நிலையில், தற்போது ஆட்டமிழந்த விதமும் ஒன்றாக இருப்பதாக பலரும் கலாய்த்து வந்தனர்.
இதுதான் சாக்கு என இந்த மீம்-ஐ இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரோகித் ஷர்மாவை கிண்டல் செய்துள்ளார். அதில் பார்பதற்கு ஒரே மாதிரி இருக்கே, அடே நா ஷாட்ட தான்பா சொன்னேன் என ஸ்மைலி எமோஜியுடன் தெரிவித்திருந்தார்.
இதை பார்த்த ஹிட்மேன் ரசிகர்கள் பத்ரிநாத்துக்கு அவரது பாணியிலேயே தக்க பதிலடி கொடுத்துள்ளனர். ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் இப்படி நடந்துகொள்வார் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தனர். ஒரு சிலரோ நீங்கள் அடித்த சர்வதேச ரன்களை (185) விட ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்த சிக்சர்கள் அதிகம் (273) என்றும், மற்றோருவரோ நீங்கள் இந்திய அணிக்காக தண்ணீ கேன் எடுத்த ரன்களை விட அவரது மூன்றாவது அதிக பட்ச ஸ்கோர் அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒருவர், இதுகூட பார்ப்பதற்கு ஒரேமாதிரியாக தான் இருக்கு என பத்ரிநாத் போல்ட்டான புகைபடத்தை பகிர்ந்துள்ளார். மேலும் ஒருவர் நீங்கள் இருவரும் ஒரே நேரத்தில் தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஆட தொடங்கினீர்கள். ஒருவர் மீம் க்ரியட்டராகவும் மற்றோருவர் உலகையே ஆளும் கிரிக்கெட்டராகவும் இருக்கிறார். இதுதான் வித்தியாசம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒருவர், ஒரு முன்னாள் வீரர் இப்படி ஒரு மீம்-ஐ பதிவிட்டு பின் தனக்கு வாட்ஸ் அப்பில் வந்ததாக சாக்கு சொல்வதெல்லாம் உச்சக்கட்ட க்ரிஞ்ச் தனம் என குறிப்பிட்டிருந்தார். இப்படி மீம்ஸ்களை பதிவிட்டு ரசிகர்களிடம் வாங்கிகட்டுக்கொள்வது பத்ரிநாத்க்கு ஒன்றும் புதிதல்ல. ஐபிஎல்லில் ஆர்சிபி அணியியை கிண்டல் செய்து அவர்களது ரசிகர்களிடம் தக்க பதிலடி வாங்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது