- Advertisement 3-
Homeவிளையாட்டுசூறாவெளியாய் வந்த பந்து.. தெறித்து ஓடிய ஹெல்மெட்.. நூழிலையில் தப்பிய வீரர்.. பதறிய பவுலர்..

சூறாவெளியாய் வந்த பந்து.. தெறித்து ஓடிய ஹெல்மெட்.. நூழிலையில் தப்பிய வீரர்.. பதறிய பவுலர்..

- Advertisement 1-

உலகம் முழுவதும் டி20 போட்டிகள் மிகவும் பிரபலம் அடைந்திருக்கும் நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் உலகமெங்கும் நடக்கும் டி20 போட்டித் தொடர்களில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடி வருகின்றனர். அதே சமயம் அந்த நாட்டில் கரீபியன் பிரீமியர் லீக் எனும் தொடர் மிகவும் பிரபலமான டி20 தொடராக இருந்து வருகிறது. இந்த தொடரில் அதிரடியான சிக்ஸர்கள் பவுண்ரிகள் என ஆட்டம் எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும்.

இந்த தொடரின் ஒன்பதாவது ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் ஆகஸ்ட் 9 அன்று மோதின. இதில் டாஸ் வென்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஃபாப் டு பிளசிஸ் 57 ரன்களும், ஜான்சன் சார்லஸ் 37 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.

அடுத்து களம் இறங்கிய ராஜபகசே 15 ரன்களும், சிகந்தர் ராசா 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் அந்த அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை குவித்திருந்தது. பின்பு 20 ஓவரில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ட்ரின்பாககோ நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான மார்க் டியல் 33 ரன்களிலும் மார்டின் கப்தில் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

அதன் பிறகு களம் இறங்கிய சட்விக் வால்டன் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பின்பு களம் இறங்கிய கைரான் பொல்லார்ட் 15 பந்துகளில் 34 எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணி 20 ஓவரின் முடிவில் 113 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ட்ரின்பாகோ அணி எளிதாக வெற்றி பெற்றது.

- Advertisement 2-

செயின்ட் லூசியா கிங்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய காரி பியர்ரி நான்கு விக்கெட்டுகள் எடுத்தார். எனினும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 23 பந்துகளில் 32 ரன்களையும் பௌலிங்கில் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்த ஆல்ரவுண்டர் சிகாந்தர் ராசா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த ஆட்டத்தில் மேலும் குறிப்படும்படி செயின்ட் லூசியா கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜான்சன் சார்லஸ் எதிரணி வீரர் டுவைன் பிராவோ வீசிய லோ ஃபுல் டாஸ் பந்துவீச்சை எதிர்கொண்ட போது எதிர்பாராத விதமாக பந்து அவரது ஹெல்மெட்டில் பட்டு நகர்ந்தது. பிராவோ வீசிய பந்தை சார்லஸ் பின்பக்கம் தட்டி விட்டு சிக்ஸரோ அல்லது பவுண்டரியோ அடித்து விடலாம் என எண்ணினார். ஆனால் பந்து அவரின் மட்டையில் பட்டு அவரது ஹெல்மெட்டில் மோதியது.

பந்து சார்லஸின் ஹெல்மெட்டில் பட்டவுடன் ஹெல்மெட் தலையில் இருந்து தரையை நோக்கி பறந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பவுலர் பிராவோ உடனடியாக அவரிடம் வந்து நலம் விசாரித்து அவர் நலமாக உள்ளார் என அறிந்த பின்னரே அடுத்த பந்தை வீச சென்றார்.

சற்று முன்