- Advertisement 3-
Homeவிளையாட்டுஐபிஎல் புறக்கணிப்பு... ஆட முடுயாது என நாடு திரும்பிய வீரர்கள்.. ஒஹோவென பாராட்டி லட்சங்களை கொடுத்த...

ஐபிஎல் புறக்கணிப்பு… ஆட முடுயாது என நாடு திரும்பிய வீரர்கள்.. ஒஹோவென பாராட்டி லட்சங்களை கொடுத்த சொந்த நாட்டு வாரியம்

- Advertisement 1-

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்று வருகிறது. ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரானது நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது சீசனை அண்மையில் நிறைவு செய்தது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையையும் சமன் செய்திருந்தது.

இந்நிலையில் இந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டும், சொந்த நாட்டின் போட்டிகளுக்காக ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறிய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம், அவர்களை போற்றும் வகையில் பல லட்சங்களை ஊக்க தொகையாக அவர்களுக்கு வாரி வழங்க போவதாக அறிவித்துள்ளது.

ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் டஸ்கின் அகமது ஆகியோர் தான் அந்த வீரர்கள். நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா அணியில் ஷாகிப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இதில் தனிப்பட்ட காரணத்தை கூறி இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஷாகிப் அல் ஹசன் பங்களாதேஷ் அணிக்காக விளையாடினார். அதேபோன்று லிட்டன் தாசும் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டு ஒரே போட்டியுடன் நாடு திரும்பினார்.

அதேபோன்று பங்களாதேஷ் அணியைச் சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான டஸ்கின் அகமது ஐபிஎல் தொடரில் மாற்றுவீராக தேர்வு செய்யப்பட்டாலும் சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்று அந்த வாய்ப்பினை மறுத்து இருந்தார். இதனால் அவர்களுக்கு பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அதனை ஈடுகட்டும் வகையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடிவு செய்திருப்பாக தெரிகிறது.

- Advertisement 2-

இதுகுறித்து பேசிய பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜலால் கூறுகையில் : பங்களாதேஷ் அணியின் மூத்த வீரர்களான லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் மற்றும் டஸ்கின் அகமது ஆகியோர் ஐபிஎல் தொடர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் விளையாடாமல் பங்களாதேஷ் அணிக்காக விளையாடியதை சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு இந்த பரிசு தொகையை நாங்கள் வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இந்த மூன்று வீரர்களுக்கும் 65 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசு தொகையாக வழங்க இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் நாட்டிற்காக ஆடுவது தான் பெருமை என்றாலும் அவர்களின் பொருளாதார மேம்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த மிகச் சிறிய அளவிலான தொகையை நாங்கள் அவர்களுக்கு நாங்கள் வழங்கி இருக்கிறோம் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பில் பார்த்தால் 65 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்பது கிட்டத்தட்ட ரூ 53 லட்சம் ஆகும்.

சற்று முன்