- Advertisement 3-
Homeவிளையாட்டுநாகினி கொண்டாட்டம் ஆரம்பம்.. ஆஃப்கானிஸ்தானை கதறவிட்ட பவுலர்கள்.. வங்கதேசம் அபார வெற்றி!

நாகினி கொண்டாட்டம் ஆரம்பம்.. ஆஃப்கானிஸ்தானை கதறவிட்ட பவுலர்கள்.. வங்கதேசம் அபார வெற்றி!

- Advertisement 1-

ஆசியக் கோப்பை தொடரின் குரூப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதின. வங்கதேசம் அணி முன்னதாக விளையாடிய போட்டியில் இலங்கை அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் நாகினி டான்ஸ் புகழ் வங்கதேச அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி மெஹதி ஹசன் மிராஸ் 112 ரன்களும், இளம் வீரர் ஷாண்டோ 104 ரன்களும் விளாசினர். அதேபோல் கடைசி நேரத்தில் கேப்டன் ஷகிப் அல் ஹசன் அதிரடியாக ஆடி 32 ரன்கள் சேர்க்க, 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது.

இதுவரை ஆஃப்கானிஸ்தான் அணி 300 ரன்களை சேஸிங் செய்து வெற்றிபெற்றதில்லை என்பதால், அந்த அணி மீதான் அழுத்தம் அதிகரித்தது. இதன்பின் களமிறங்கிய அனுபவ வீரர் குர்பாஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ரஹ்மத் – ஜத்ரான் கூட்டணி இணைந்தது. விக்கெட் கொடுக்க கூடாது என்பதற்காக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 10 ஓவர்கள் முடிவில் 37 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.

இதன்பின்னர் ரஹ்மத் ஷா 33 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் தொடக்க வீரர் ஜத்ரான் அதிரடியாக ஆடினார். இதன் காரணமாக 51 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதேபோல் கேப்டன் ஷாகிதியும் இவருக்கு நல்ல கம்பெனி கொடுக்க, ஆஃப்கானிஸ்தான் ஸ்கோர் நன்றாக உயர்ந்தது. ஆனால் ஹசன் மஹ்முத் பந்துவீச்சில் ஜத்ரான் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ஆஃப்கானிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

- Advertisement 2-

இதையடுத்து அரைசதம் விளாசிய வேகத்தில் கேப்டன் ஷாகிதியும் ஆட்டமிழந்து வெளியேற. பின்னர் வந்த நஜிபுல்லா ஜத்ரான் 17 ரன்களும், குல்புதின் நைப் 15 ரன்களிலும் வெளியேறினர். ரன்கள் பிரஷர் எகிறிய நிலையில், ஒவ்வொரு வீரரும் சிக்சர் அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்து சென்றனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரஷீத் கான் 15 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார்.

இருப்பினும் ஆஃப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் வங்கதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இமாயல வெற்றியை பெற்றுள்ளது. வங்கதேச அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்களான டஸ்கின் 4 விக்கெட்டுகளையும், சொரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் வங்கதேச அணி சூப்பர் 4 சுற்றில் ஒரு காலடியை எடுத்து வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

சற்று முன்