- Advertisement 3-
Homeவிளையாட்டுநாங்க வந்துட்டே இருக்கோம்.. இந்தியாவுக்கு பங்களாதேஷ் கொடுத்த எச்சரிக்கை.. கூடவே செஞ்ச தரமான உலக சாதனை..

நாங்க வந்துட்டே இருக்கோம்.. இந்தியாவுக்கு பங்களாதேஷ் கொடுத்த எச்சரிக்கை.. கூடவே செஞ்ச தரமான உலக சாதனை..

- Advertisement 1-

சூப்பர் 8 சுற்றில் ஏழு அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் ஒரே ஒரு அணிக்கான இடம் மட்டும் மீதம் இருந்து வந்தது. இந்த ஒரே ஒரு இடத்திற்காக குரூப் டி-யில் இடம்பெற்றிருந்த பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிக்கு அணிகளுக்கு இடையே சிறிய போட்டி இருந்தது.

நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோத இருந்த போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றால் அவர்கள் நேரடியாக சூப்பர் 8 சூட்டிற்கு தகுதி பெற்று விடுவார்கள் என்ற நிலை இருந்தது. இன்னொரு பக்கம், வங்காளதேசம் தோல்வி அடைந்து நெதர்லாந்து அணி இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையும் இருந்தது.

இதற்கு மத்தியில் இரண்டு போட்டிகளும் சில மணி நேர இடைவெளியில் ஆரம்பமாகி இருந்தது. அந்த வகையில் முதலில் நடைபெற்ற பங்களாதேஷ் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அவர்கள், நேபாளம் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது.

வங்காளதேச அணியில் ஒரு வீரர் கூட 20 ரன்களை தொடாத நிலையில் நேபாளம் அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தது. தென்னாபிரிக்கா அணிக்கு எதிராகவும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளியிருந்த நேபாளம் அணி, மீண்டும் ஒருமுறை அந்த அற்புதத்தை செய்திருந்தது.

- Advertisement 2-

இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி தோல்வி அடைந்தால் அவர்களது சூப்பர் 8 வாய்ப்பு கேள்விக்குறியாகலாம் என்ற சூழலில் நேபாளத்தை எதிர்த்து பந்து வீச்சில் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.

கடைசி ஓவர் வரை போராடி பார்த்து நேபாளம் அணியால் 85 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாக பங்களாதேஷ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேரடியாக சூப்பர் 8 சுற்றிற்கும் தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியின் இளம் வீரர் ஹாசன் சாகிப் 4 ஓவர்களில் 2 மெய்டனுடன் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதே போல மற்றொரு பந்து வீச்சாளரான முஸ்தாஃபிசுர் ரஹ்மான், 7 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதால் பங்களாதேஷின் வெற்றியும் மிக எளிதாக அமைந்திருந்தது. அப்படி இருக்கையில், டி20 உலக கோப்பை வரலாற்றில் மிக முக்கியமான சாதனை ஒன்றை தற்போது படைத்துள்ளது பங்களாதேஷ் அணி.

மிகக் குறைந்த ரன்கள் எடுத்து அதனை கட்டுப்படுத்தி வெற்றி பெற்ற அணி என்று சிறப்பை தற்போது பங்களாதேஷ் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக இதே தொடரில், தென்னாபிரிக்க அணி 114 ரன்கள் எடுத்து எதிர்த்து ஆடிய வங்காளதேசத்தை அதற்குள் கட்டுப்படுத்தியது தான் சாதனையாக இருந்தது. அதனை பங்களாதேஷ் அணி 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தங்கள் வசமாக சாதனையை மாற்றி உள்ளது.

மேலும் சூப்பர் 8 சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடம்பெற்ற பிரிவில் வங்காளதேச அணி தேர்வாகி உள்ளது. இதில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதவுள்ள சூப்பர் 8 போட்டி, ஜூன் 22 ஆம் தேதியன்று ஆண்டிகுவாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்