பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் தொடர் இன்று டாக்காவின் ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது.
இதில், முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பங்களாதேஷ் அணி வீரர்கள் விளையாடி வந்தனர். முதல் இரண்டு விக்கெட்டை இழந்த நிலையில் மூன்றாவது வரிசையாக நஜிபுல் ஹூசைன் சாந்தோ களமிறந்தினார். தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 84 பந்துகளில் 10 பவுண்டரிகள் அடித்து 76 ரன்கள் குவித்தார்.
ஆட்டத்தின் போது, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்தை எதிர்கொண்ட முஸ்பிகியூர் ரஹீம், பந்தை பே தடுத்து நிறுத்தினார். ஆனால், பந்து ஸ்டம்ப்பை நோக்கி சென்றது. இதனைத் கண்ட பேட்ஸ்மென் பந்து ஸ்ட்டம்ப்பில் படாமல் இருக்க தனது காலால் எட்டி உதைக்க முயன்றார்.
ஆனால், அதற்குள் பந்து ஸ்டம்ப்பை தாக்கியது. இதனை சற்றும் எதிர்பாராத முஸ்பிகியூர் ரஹீம் அங்கிருந்து பெவிலியன் திரும்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் “முஸ்பிகியூர் ரஹீம்-ன் கால்பந்து திறமைகள் வீணாகிவிட்டது” என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
பங்களாதேஷ் அணி 95 ரன்கள் மட்டுமே எடுத்து 34.3 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிட்டது. நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் பெர்குசன் 6.3 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வந்த நியூசிலாந்த அணி வீரர்கள் 34.5 ஓவர்களில் இலக்கை எட்டி நியூசிலாந்த அணி அபார வெற்றி பெற்றது.