வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் செட் மிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் வீரர் ரக்கீம் கார்ன்வால் ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த செண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஃபிளெட்சர் 37 பந்துகளில் 56 ரன்களும், வில் சமீத் 36 பந்துகளிஉல் 63 ரன்களும் விளாசினர். தொடர்ந்து வந்த கேப்டன் ஷெர்ஃபானே ரூதர்ஃபோர்ட் 27 பந்துகளிஉல் 65 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து பார்படாஸ் ராயல் அணிக்கு 221 ரன்கள் என்ற வலிமையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் களமிறங்கிய பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் – கார்ன்வால் கூட்டணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் மேயர்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களை கண்டுகொள்ளாமல் மற்றொரு தொடக்க வீரர் ரக்கீம் கார்ன்வால் ருத்ரதாண்டவம் ஆடினார்.
ஒரே ஓவரில் 3 சிக்சகளை விளாசி 23 பந்துகளில் கார்ன்வால் அரைசதம் கடந்த நிலையில், ஒவ்வொரு ஓவருக்கும் 2 சிக்சர்களை விளாசி மிரட்டினார். அதில் ஒரு சிக்சர் 111 மீட்டர் தூரம் சென்று விழுந்தது ரசிகர்களை பிரமிக்க வைத்தது. இந்த அதிரடியால் 45 பந்துகளில் சதம் விளாசி கார்ன்வால் வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சதம் விளாசிய பின்னர் அவர் பேட் டிராப் கொண்டாட்டத்தில் ஈடுபட, ரசிகர்களும் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர். இதன்பின் 48 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்த கார்ன்வால் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இவரை ஆட்டத்தை கண்ட பார்படாஸ் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாகம் செய்தனர். இந்த போட்டியில் இவர் 12 சிக்ஸர்களும் 4 பவுடரிகளையும் அடித்துள்ளார். அதை மட்டும் கணக்கிட்டு பார்த்தால் 16 பந்துகளில் இவர் 88 ரன்களை விளாசி உள்ளார்.
Letting his bat do the talking to silence critics. Rahkeem Corwnall 102* off just 48 🫡#CPL2023 #CPLonFanCode pic.twitter.com/v5QuiT5hlf
— FanCode (@FanCode) September 4, 2023
பார்ப்பதற்கு இன்சமாம் உல் ஹக்கை விட அதிக எடை கொண்ட வீரராக இருக்கும் கார்ன்வால், இவ்வளவு அதிரடியாக டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதனால் இவரை ஐபிஎல் தொடரிலும் கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.