- Advertisement -
Homeவிளையாட்டுரோஹித்தே அப்படி சொன்னாரு.. அஸ்வினை ஒதுக்க சூழ்ச்சி நடந்துச்சு.. பத்ரிநாத் சொன்ன பரபர தகவல்..

ரோஹித்தே அப்படி சொன்னாரு.. அஸ்வினை ஒதுக்க சூழ்ச்சி நடந்துச்சு.. பத்ரிநாத் சொன்ன பரபர தகவல்..

- Advertisement-

உண்மையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு அறிவித்ததற்கு பின்னர் ஏதேனும் மர்மங்கள் இருக்கிறதா என்று தான் தற்போது அனைவருமே அலசி வருகின்றனர். இந்திய அணி கண்ட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் அஸ்வின் தொடருக்கு நடுவே அதுவும் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் போது ஏன் ஓய்வினை அறிவிக்க வேண்டும் என்று குழப்பம் யாருக்கும் எழாமல் இல்லை.

மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே இடம்பிடித்திருந்த அஸ்வின் சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள டெஸ்டில் நிச்சயம் களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நடுவே அஸ்வின் இப்படி ஓய்வு முடிவை எடுத்தது அதிகம் பரபரப்பை தான் ஏற்படுத்தியது.

இதில் உண்மை என்னவாக இருக்கும் என்பது ஒரு பக்கம் இருக்க அஸ்வினின் தந்தையும் கூட அவர் ஏதாவது அவமானங்களை சந்தித்திருக்கலாம் என்றும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அவர் தெரியாமல் பேசிவிட்டார் என அஸ்வினே விளக்கம் கொடுத்தாலும் பல கிரிக்கெட் பிரபலங்கள் இது தொடர்பாக நிறைய கருத்துக்களையும் வெளியிட்டு தான் வருகிறார்கள்.

அந்த வகையில் முன்னாள் இந்திய வீரரும், சிஎஸ்கே அணியில் அஸ்வினுடன் இணைந்து ஆடியவருமான தமிழக வீரர் பத்ரிநாத், இதுபற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “அஸ்வின் ஓய்வு முடிவை அறிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் நியாயமாக நடத்தப்படவில்லை என்றே நினைக்கிறேன். பெர்த் டெஸ்டிற்கு முன்பாகவே அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என ரோகித் சர்மா கூறியிருந்தார்.

- Advertisement-

இதனால் வாஷிங்டன் சுந்தர் அவருக்கு முன்பாக அணியில் இடம்பிடித்த போது அஸ்வின் அந்த முடிவை எடுக்க வேண்டும் என நினைத்திருந்தார். இதன் மூலம் அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பது தான் தெரிகிறது. தமிழகத்தில் இருந்து ஒரு கிரிக்கெட் வீரர் இந்த உயரத்திற்கு வந்தது மிகப்பெரிய விஷயம். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. மற்ற மாநிலங்களை சேர்ந்த வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆனால் தமிழக வீரராக இருந்த அஸ்வின் 500 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து ஒரு லெஜெண்டாகவும் உருவாகியுள்ளார். அப்படி என்றால் எவ்வளவு விஷயத்தை அஸ்வின் கடந்து வந்ததிருப்பார் என யோசித்துப் பாருங்கள். பலமுறை அஸ்வினை ஒதுக்குவதற்கான முயற்சிகள் நடந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் பீனிக்ஸ் பறவை போல அனைத்தையும் கடந்து அஸ்வின் சாதித்திருந்தார்.

அஸ்வின் நிச்சயம் ஒரு நாள் விடைபெறுவார். ஆனால் அந்த முடிவு இப்படி இருந்திருக்க கூடாது. அவர் மிகவும் மகிழ்ச்சியாக ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அதற்கு இது நிச்சயம் நியாயமானது இல்லை. அஸ்வின் மிகச் சரியாக கவனிக்கப்படவில்லை. அவரது முன்னேற்றத்தை நான் மிக அருகில் இருந்து கவனித்துள்ளேன்.

தமிழ்நாட்டில் உள்ள கிரிக்கெட் வீரர் என்பதால் அவருக்கு இப்படி நிகழ்ந்துள்ளது. வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றால் நிச்சயம் இப்படி நடந்திருக்காது” என பத்ரிநாத் கூறியுள்ளார்.

சற்று முன்