- Advertisement -
Homeவிளையாட்டுஇன்னும் ஒரு வருசத்துக்கு அவருக்கு வாய்ப்பே கிடைக்காது.. ஐபிஎல் தான் இனி கதி.. பாசித் அலி...

இன்னும் ஒரு வருசத்துக்கு அவருக்கு வாய்ப்பே கிடைக்காது.. ஐபிஎல் தான் இனி கதி.. பாசித் அலி பேட்டி

- Advertisement-

ஐபிஎல் உள்ளிட்ட பல முதல் தர கிரிக்கெட் போட்டிகளால் தற்போது இந்திய அணியில் இளம் வீரர்களின் இடமும் அதிகமாக உள்ளது. முன்பெல்லாம் சீனியர் வீரர்களே இந்திய அணியில் அதிகமாக இருக்கும் சூழலில் தற்போது துடிப்பான இளம் வீரர்களும் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றனர். சர்வதேச அரங்கில் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து ஆடும் போது நெருக்கடி இல்லாமல் முதிர்ச்சி நிறைந்த வீரர்களை போல ஆடுவதால் தொடர்ந்து அவர்களுக்கான வாய்ப்பு இந்திய அணியில் கிடைத்து வருகிறது.

அதிலும் இளம் வீரர்கள் மீது அதிக கவனம் செலுத்தும் கம்பீர் பயிற்சியாளராக இருப்பதும் அவர்களுக்கு இன்னொரு சாதகமாக பார்க்கப்படுகிறது. இலங்கை தொடரை தோல்வி பாதையில் இந்தியா முடித்திருந்தாலும் இனிவரும் தொடர்களில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவிக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

அந்த வகையில் பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி ஆட உள்ளது. இதனிடையே அடுத்த ஆண்டு சாம்பியன்ஷிப் தொடர் வரை நல்ல தொடர்கள் இருப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.

இதற்கு மத்தியில் ஒரு இளம் வீரரால் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை இடம்பிடிக்க முடியாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி கூறி உள்ளார். இந்திய அணியில் தற்போது டாப் மூன்று இடத்திற்கு ருத்துராஜ், ஜெய்ஸ்வால் என பல வீரர்களுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.

- Advertisement-

அந்த இடத்தில் ஆடி வந்த இஷான் கிஷான் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை புறக்கணித்ததுடன் முதல் தர போட்டிகளில் ஆடாமல் இருந்தது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் வருடாந்திர சம்பள பட்டியலில் இருந்தும் அவர் பெயர் நீக்கப்பட பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

தற்போது உள்ளூர் தொடர்களில் சிறப்பாக அவர் ஆடிவரும் சூழலில், இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே அவரை பற்றி பேசியுள்ள பாசித் அலி, “இஷான் கிஷன் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் வரை அவர் இந்திய அணியில் திரும்புவது கடினம் தான்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அடுத்த சாம்பியன்ஸ் டிராபி வரை இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என்றே நினைக்கிறேன். அதன் பின் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என பாசித் அலி கூறி உள்ளார்.

ஒரு காலத்தில் கிடைக்கும் குறைந்த பந்துகளில் ரன் சேர்த்து அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்த இஷான் கிஷன், தொடர்ந்து இந்திய அணியில் ஆட தவற அவரது வாய்ப்பில் மற்ற பல இளம் வீரர்கள் ஆடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்