- Advertisement -
Homeவிளையாட்டுமத்தவங்கள மாதிரி விளையாட விட்டா தான...அடக்கி அடக்கி வச்சா இந்திய அணிக்கு நஷ்டம் தான்... ராபின்...

மத்தவங்கள மாதிரி விளையாட விட்டா தான…அடக்கி அடக்கி வச்சா இந்திய அணிக்கு நஷ்டம் தான்… ராபின் உத்தப்பா அதிரடி பேச்சு

- Advertisement-

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி அபார வென்றது. ஆனால் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தாங்கள் யார் என்பதை இந்திய அணி நிரூபித்து வருகிறது. சொந்த மண்ணின் சூழலை புரிந்து அதற்கேற்ப திட்டங்களை தீட்டி இந்திய அணியை வீழ்த்தி வருகிறது.

குறிப்பாக அந்த அணியின் அதிரடி வீரர்களான மேயர்ஸ், ஹெட்மயர், பூரன், அகில் ஹொசைன் உள்ளிட்டோர் பல்வேறு கிரிக்கெட் லீக்களில் விளையாடிய அனுபவத்தை இந்திய அணிக்கு எதிராக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மேஜர் லீக் தொடரில் அபார ஃபார்மில் இருந்த பூரன், அப்படியே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காகவும் தொடர்ந்து வருகிறார்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் டி20 அனுபவத்திற்கு முன் இந்திய வீரர்கள் திணறி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா பேசும் போது, இந்திய வீரர்கள் டி20 லீக்களில் ஐபிஎல் தொடரில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும் என்று பிசிசிஐ முடிவு செய்திருப்பது, ஐபிஎல் தொடரின் சந்தையை வேண்டுமானால் விரிவுபடுத்தலாம்.

ஆனால் ஐசிசி தொடர்களில் இந்திய அணி வீரர்கள் சொதப்புவதற்கும் இந்த முடிவு காரணமாக இருக்கும். ஏனென்றால் மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நமது நாட்டு பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் போது கூடுதல் சாதகம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் நிக்கோலஸ் பூரன் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடும் போது இந்திய வீரர்களின் பந்துவீச்சை அதிகமாக எதிர்கொண்டிருப்பார்.

- Advertisement-

அந்த அனுபவம் நிக்கோலஸ் பூரன் போன்ற வீரர்களுக்கு இருதரப்பு கிரிக்கெட் தொடர்களிலும், ஐசிசி தொடர்களிலும் உதவியாக இருக்கும். ஒரு கட்டத்திற்கு மேல் இந்திய பவுலர்களின் வேறுபாடு, டெக்னிக், ஆட்ட நுணுக்கம் அனைத்தையும் ஐபிஎல் தொடர் மூலமாக வெளிநாட்டு வீரர்களால் கற்றுக் கொள்ள முடியும். இதுபோன்ற விஷயங்கள் அழுத்தமான நேரங்களிலும் அவர்களுக்கு உதவியாக இருந்து வருகிறது.

இதனால் இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் பங்கேற்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு பணம் தேவையாக இருப்பதால் வெளிநாட்டு டி20 லீக்களில் விளையாட ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்களுக்கு அந்த பிரச்சனையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்