Homeகிரிக்கெட்ரிங்கு சிங், ருதுராஜ் பற்றி கவலை வேண்டாம். அவர்களுக்கு மற்றொரு தொடர் காத்திருக்கிறது - பிசிசிஐ...

ரிங்கு சிங், ருதுராஜ் பற்றி கவலை வேண்டாம். அவர்களுக்கு மற்றொரு தொடர் காத்திருக்கிறது – பிசிசிஐ சோர்ஸ் விளக்கம்

-Advertisement-

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ரிங்கு சிங் 14 போட்டிகளில் விளையாடி 474 ரன்களை விளாசினார். அதேபோல் சென்னை அணிக்காக ஆடிய ருதுராஜ் கெய்காட் 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 564 ரன்களை குவித்தார். இதன் மூலம் இருவரும் இந்திய டி20 அணிக்கு நிச்சயம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இருவருமே தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. அதற்கான பயிற்சியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-Advertisement-

ஆனால் தேர்வுக் குழுவினரோ எந்தவொரு வீரரையும் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் தேர்வு செய்யவில்லை. இதனால் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் பிசிசிஐ சோர்ஸ், ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் அயர்லாந்து அணிக்க்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு நிச்சயம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

அதோடு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய அனைத்து வீரர்களையும் ஒரே தொடரில் தேர்வு செய்து பரிசோதிக்க விரும்பவில்லை. இதனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், நிச்சயம் அடுத்தடுத்த டி20 தொடர்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் இளம் வீரர்கள் பலரும் இந்திய ஏ அணிக்காக விளையாட இருக்கிறார்கள்.

-Advertisement-

சீனியர் அணியில் இடம்பெறுவதற்கு முன்பாக இந்திய ஏ அணியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். அதற்காக பிசிசிஐ-யில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிசிசிஐ தரப்பில் விரைவில் இந்திய ஏ அணிக்கான சுற்றுப்பயணம் பற்றி அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அமைதி காத்துள்ளனர். ருதுராஜ், ரிங்கு சிங் மட்டுமல்லாமல் ஜித்தேஷ் சர்மா, நடராஜன், மோசின் கான், தீபக் சஹர் உள்ளிட்ட வீரர்கள் யாருமே தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான இந்திய டி20 அணித் தேர்வு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

-Advertisement-

சற்று முன்