- Advertisement 3-
Homeவிளையாட்டுகே எல் ராகுல் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவாரா?... முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட பிசிசிஐ!

கே எல் ராகுல் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவாரா?… முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட பிசிசிஐ!

- Advertisement-

நேற்று முன் தினம் நடந்த ஐபிஎல் சீசன் 16- 43 ஆவது போட்டியில் லக்னோ மற்றும் பெங்களுர் அணிகள் மோதின. இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது இந்திய தொடக்க ஆட்டக்காரரும் எல்எஸ்ஜி கேப்டனுமான கே எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் முதல் இரண்டாவது ஓவரிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக க்ருனாள் பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டார். இதன் காரணமாக ராகுல் நம்பர் 11 இல்தான் பேட்டிங் செய்தார், இருப்பினும் அவரால் விக்கெட்களுக்கு இடையே ஓட முடியவில்லை. இதனால் அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, IPL 2023 இல் ராகுல் மேலும் பங்கேற்பது BCCI மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) முடிவைப் பொறுத்தது என சொல்லபப்டுகிறது. ராகுலுக்கு ஏற்பட்டுள்ள காயம் தீவிரமானது என சொல்லப்படுகிறது. அவருக்கு வலி மற்றும் வீக்கம் இருப்பதால், அவர் அடுத்து சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிகிறது.

- Advertisements -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) இறுதிப் போட்டி இன்னும் ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் மாற்று விக்கெட் கீப்பராக இருக்கும் ராகுலை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு விளையாட வைப்பதுதான் பிசிசிஐ மற்றும் என்சிஏவின் முன்னுரிமையாக இருக்கும். இனிமேல் ராகுல் குறித்த ஒவ்வொரு முடிவும் பிசிசிஐயின் மேற்பார்வையில் எடுக்கப்படும் என்று லக்னோ அணி வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அவர் இப்போதுவரை லக்னோவில் அணியுடன்தான் இருக்கிறார். அவருக்கு விரைவில் ஸ்கேன் செய்யப்பட உள்ளது. ஆனால் திங்களன்று ராகுல், அணியில் இல்லாத நிலையில் தலைமைப் பொறுப்பை ஆல்ரவுண்டர் க்ருனாள் பாண்ட்யா ஏற்பார் என தெரிகிரது.

- Advertisement-

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸைப் பொருத்தவரை, ராகுல் தனது அணியில் தொடக்க ஆட்டக்காரராக இருப்பது மட்டுமல்லாமல் கேப்டனாகவும் இருப்பதால் அவர் இல்லாதது அணியின் வெற்றிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். ராகுலுக்குப் பதிலாக குயிண்ட்டன் டி காக்கை மீண்டும் அணியில் கொண்டுவரப்படலாம் என தெரிகிறது. மனன் வோஹ்ராவும் தொடக்க ஆட்டக்காரருக்கான பட்டியலில் இருப்பார் என்று தெரிகிறது.

சற்று முன்