- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித்கிட்ட இருந்து கத்துகிட்ட ஐடியா தான்.. இந்தியாவை தோக்கடிக்க பென் ஸ்டோக்ஸ் செஞ்ச டெக்னிக்..

ரோஹித்கிட்ட இருந்து கத்துகிட்ட ஐடியா தான்.. இந்தியாவை தோக்கடிக்க பென் ஸ்டோக்ஸ் செஞ்ச டெக்னிக்..

- Advertisement 1-

தங்கள் மீது பல கிரிக்கெட் பிரபலங்கள் வைத்த அனைத்து விமர்சனங்களையும் சுக்கு நூறாக்கி முதல் போட்டியிலேயே இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்று அசத்தியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் ஆரம்பமே வெற்றியாக தான் தொடங்கியுள்ளது.

மீதமுள்ள நான்கு போட்டிகளில் அவர்கள் வெற்றி பெறுவார்களா இல்லையா என்பது இன்னொரு பக்கம் இருந்தாலும் இந்த போட்டியில் அதுவும் 190 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணியை இரண்டாவது இன்னிங்சில் வெளுத்து வாங்கி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது.

ஒரு பக்கம் ஒல்லி போப்பின் பேட்டிங் அற்புதமாக இருக்க அவர் 196 ரன்கள் சேர்த்தார். இன்னொரு பக்கம் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளை எடுத்ததும் இரண்டாவது இன்னிங்ஸில் மிக சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி பேஸ்பால் ஆட்டத்தை விமர்சித்த அனைவரது வாயையும் தற்போது மூடி உள்ளது.

இதே போல கங்குலி உள்ளிட்ட பலரும் கூட இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் என்றும் ஒரு போட்டியில் கூட இங்கிலாந்து அணியால் வெற்றி பெற முடியாது என்றும் தான் குறிப்பிட்டிருந்தனர். அப்படி ஒரு சூழலில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இது பற்றி இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“இங்கிலாந்தின் கேப்டனாக நான் தேர்வான பிறகு, மிகச்சிறந்த வெற்றியாக இந்த போட்டியை நான் பார்க்கிறேன். கேப்டனாக நான் இந்தியாவில் முதல் முறையாக வந்துள்ளேன். நான் ஒரு விஷயத்தை அதிகம் கவனித்து உணர்ந்து கொள்வேன். இதனால் இந்த டெஸ்டில் இந்திய அணியின் ஃபீல்டிங்கில் இருந்து பல்வேறு விஷயங்களை உற்று கவனித்தேன். ரோஹித் எப்படி ஃபீல்டிங் செட் செய்கிறார், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பற்றியும் நான் முதலில் நன்கு கவனித்தேன்.

தனது முதல் டெஸ்ட் போட்டியில் டாம் ஹார்ட்லி 9 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். முதுகு காயத்தில் இருந்து மீண்டு வந்த ஒல்லி பாப் அபாரமான இன்னிங்ஸை ஆடி உள்ளார். அதே போல அணியில் தேர்வான வீரர்கள் சிறப்பாக செயல்படாத போதிலும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து வாய்ப்பு கொடுத்தோம். ஒல்லி போப் 190 ரன்களுக்கு மேல் அடித்த ஒரு இன்னிங்ஸ், துணைக் கண்டங்களில் ஒரு இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஆடிய சிறந்த இன்னிங்சாக நான் பார்க்கிறேன்.

இந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்து இருந்தாலும் கூட மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக ஆட முயற்சிப்போம். நான் தோல்விகளைப் பார்த்து பயப்படும் ஆள் கிடையாது. எனக்கான முயற்சிகளை செய்து அணியில் உள்ள அனைவருக்குமே ஆதரவளித்து வாய்ப்பு வழங்குவது தான் என்னுடைய வேலை” என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

சற்று முன்