- Advertisement 3-
Homeவிளையாட்டுஅஸ்வின், குல்தீப் இருக்குறப்போ ஒன்னும் முடியாம போச்சு.. வேதனையில் பென் ஸ்டோக்ஸ்..

அஸ்வின், குல்தீப் இருக்குறப்போ ஒன்னும் முடியாம போச்சு.. வேதனையில் பென் ஸ்டோக்ஸ்..

- Advertisement 1-

பேஸ் பால் ஆட்டம், பென் ஸ்டோக்ஸ் கேப்டன், மெக்கல்லம் பயிற்சியாளர் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணியினர் வந்திருந்தனர். ஆனால் இந்த தொடரில் பல்வேறு விஷயங்கள் அவர்களுக்கு சாதகமாக அமையாமல் போக தொடரை இழக்கவும் நேரிட்டது.

முதல் போட்டியில் நன்றாக ஆடிய இங்கிலாந்து அணி, வெற்றியை பெற்றிருந்தாலும் அதன் பின்னர் அதனை தொடர முடியாமல் போனது நிச்சயம் இங்கிலாந்து ரசிகர்களுக்கும் வேதனையான விஷயம் தான். இந்த தொடர் முழுக்க இங்கிலாந்து அணி வீரர்களான டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், ஒல்லி போப், ஜோ ரூட் உள்ளிட்ட சில வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ஆனாலும் தொடரை வெல்வதற்கான தகுதியான ஆட்டமாக அவை எடுபடாமல் போக இந்திய அணியும் தொடரை வென்றிருந்தது.

இந்திய அணிக்கு இந்த தொடர் மிக முக்கியமான ஒரு வெற்றி தொடராக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் ஐந்து அறிமுக வீரர்கள் இந்த தொடரில் களமிறங்கி இருந்த போதிலும் அவர்களைக் கொண்டு ரோஹித் இதனை வென்றிருந்தது தான் தற்போது பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தொடரை இழப்பதற்கு முன்பாக எப்படியாவது இந்த தொடரில் வென்று விடுவோம் என பென் ஸ்டோக்ஸ் ஆருடம் கூறி வந்த நிலையில் தற்போது அதனை இழந்துள்ளது பற்றி சில கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு சிறப்பான அணியுடன் நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம். இன்னும் நிறைய கிரிக்கெட் போட்டிகள் வர இருப்பதால், இந்த தொடரில் உள்ள பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன். இந்திய அணி முன்னிலையில் இருக்கும் போது, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் உள்ளிட்ட பந்து வீச்சாளர்களை எதிர்த்து ரன் அடிக்க நேரும் போது சில ரிஸ்க்குகளை நாம் எடுக்க வேண்டியிருக்கும்.

- Advertisement 2-

நாங்கள் வீழ்ந்தாலும் எங்களின் நோக்கம் சரியாக இருந்தது. எங்கள் அணியில் உள்ள பாசிட்டிவான விஷயங்கள் என்றால் சாக் கிராவ்லி மற்றும் பென் டக்கட் ஆகியோரின் வலிமையான பார்ட்னர்ஷிப்பை சொல்லலாம். சோயப் பஷீர் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தங்களின் திறனை வெளிப்படுத்தி இருந்தனர். அதே போல ஜோ ரூட்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். நானும் திரும்ப பந்து வீச வந்தது நன்றாக உள்ளது.

ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஆண்டர்சன் இருந்து கொண்டு டெஸ்டில் 700 விக்கெட்டுகள் எடுப்பது என்பது அபாரமான விஷயமாகும். கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டிய பலரும் பின்பற்ற விரும்பும் வீரர் அவர். நான் பார்த்தது முதல் தற்போது வரை ஃபிட்டாகவே இருக்கிறார்” என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

சற்று முன்