- Advertisement 3-
Homeவிளையாட்டுநாங்க தோத்தது கூட ஓகே, ஆனா பும்ரா பண்ணது எல்லாம்.. தோல்விக்கு பின் பேசிய பென்...

நாங்க தோத்தது கூட ஓகே, ஆனா பும்ரா பண்ணது எல்லாம்.. தோல்விக்கு பின் பேசிய பென் ஸ்டோக்ஸ்..

- Advertisement 1-

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், பும்ரா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்களின் உதவியுடன் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தி உள்ளது. முதல் டெஸ்டில் இதே போன்ற அதிக பலத்துடன் விளங்கிய இந்திய அணி தோல்வியை தழுவ நேரிட்டது. ஆனால் அந்த தவறுகளை எல்லாம் இரண்டாவது டெஸ்டில் செய்யாமல் மிக நேர்த்தியாகவும், கவனமாகவும் ஆடிய இந்திய அணி தாங்கள் டெஸ்ட் போட்டிகளில் கில்லி என்பதை வென்று நிரூபித்துள்ளது.

இந்திய அணியை எதிர்த்து ஆடிய இங்கிலாந்தையும் எளிதில் எடுத்துக் கொள்ள முடியாது. 399 ரன்கள் என்ற பெரிய இலக்கு இருந்த போதிலும் கூட, அதனை நோக்கி அதிரடியாக ஆடி ரன் சேர்த்ததால் அவர்களுக்கும் கூட வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனாலும், பும்ரா, அஸ்வின் உள்ளிட்டோர் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை காலி செய்ய, போட்டியும் பின்னர் முழுமையாக இந்தியாவின் பக்கம் திரும்பியது.

முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததுடன் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார். இந்தியா போன்று சுழலுக்கு அதிக சாதகங்கள் இருக்கும் மண்ணில் கூட, பும்ரா தனது வேகப்பந்து வீச்சால் அசர வைத்தது, தற்போது கிரிக்கெட் பிரபலங்கள் பலரையும் கூட வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதனிடையே, தொடரை வெற்றியுடன் தொடங்கி 2 வது டெஸ்டில் தோல்வி அடைந்துள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இது பற்றி பேசுகையில், “கடைசி இன்னிங்சில் நிச்சயம் இலக்கை எட்டிப் பிடித்து விடுவோம் என்று தான் நினைத்தோம். இது போன்ற தருணங்களில், ஸ்கோர் போர்டில் நெருக்கடி இருக்கும் போது தான் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த பார்ப்போம்.

- Advertisement 2-

அதே போல, சிறந்த போட்டியில் மீண்டும் ஒரு முறை பங்கெடுத்துள்ளோம். அணி வீரர்கள் எப்படி ஆட வேண்டும் என எதை பற்றியும் நான் சொல்ல போவதில்லை. எங்கள் அணியில் உள்ள அனைவருமே தரமான வீரர்கள் தான். அவர்கள் ஆடும் இடங்களில் உள்ள சூழ்நிலை அறிந்து அதற்கேற்ப சிறப்பாக ஆடக்கூடியவர்கள்.

மேலும் ஸ்பின்னர்களை தலைமை தாங்குவதும் அருமையாக உள்ளது. இன்றும் அவர்கள் அற்புதமாக செயல்பட்டனர். ஆண்டர்சன் மற்றும் பும்ரா ஆகிய இருவருமே சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள். பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளர் எதிரணியில் இருந்தாலும் அவர்களை நீங்கள் பாராட்ட நினைப்பீர்கள். அப்படி எங்கள் அணியில் உள்ள ஒரு வீரர் தான் ஜேம்ஸ் ஆண்டர்சன்” என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

சற்று முன்