- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்திய அணியை காலி செய்ய.. தோனி ரூட்டையே கையில் எடுத்த இங்கிலாந்து.. அப்போ அடி கன்ஃபார்ம்..

இந்திய அணியை காலி செய்ய.. தோனி ரூட்டையே கையில் எடுத்த இங்கிலாந்து.. அப்போ அடி கன்ஃபார்ம்..

- Advertisement 1-

பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரண்டு பெரிய அணிகள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மோத உள்ளது. இந்திய மண்ணில் இந்திய அணி தான் அதிக ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை அப்படியே முதல் டெஸ்ட் போட்டியில் பொய்யாக்கி அசத்தியிருந்தது இங்கிலாந்து அணி. தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது போட்டியில் சில தவறுகளின் காரணமாக தோல்வியை தழுவவும் நேரிட்டது.

ஒரு போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாக மீண்டும் இந்திய அணியே அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று விடும் என நாம் கருதி விட முடியாது. பேஸ்பால் ஆட்டம் ஆடிவரும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, பயிற்சியாளர் மெக்கல்லம் உதவியுடன் மிகச் சிறப்பாகவும் சமீப காலமாக செயல்பட்டு வருகிறது.

இந்திய மண்ணிலும் கூட அவர்கள் இந்திய அணி ஆட்டத்தை சீர்குலைத்து தங்களது திட்டத்தை வகுத்து மிகச் சிறப்பாக தயாராகி வருவதால் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி இருக்கும் என்றும் தெரிகிறது. இதனால் ரோஹித் மற்றும் பென் ஸ்டோக்ஸ் என இருவருமே எந்த மாதிரியான திட்டங்களுடன் எதிர் அணியை சந்திக்க வேண்டும் என்பது பற்றி தற்போதே மிக தீவிரமாக முடிவெடுத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் ராஜ் கோட்டில் நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் நிச்சயம் தீப்பொறி பறக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் இங்கிலாந்தின் திட்டம் பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

இது பற்றி அவர் பேசுகையில், “கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கல்லம் ஆகியோரிடம் இருந்து வந்த செய்தி என்னவென்றால் முடிவுகள் என்ன என்பது நமக்கு தேவை மற்றும் முக்கியம் இல்லாத ஒன்றாகும். அணி வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பது தான் முக்கியம் என அவர்கள் தெரிவித்தார்கள்” என ஒல்லி ராபின்சன் கூறியுள்ளார்.

அவர் கூறியதைப் போலவே இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக ஆடாத பட்சத்தில் தோல்வி அடைந்தாலும் கூட அவர்களின் ஆட்டத்திறனை வெகுவாக பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து பாராட்டி வருகிறார். தோனி தான் பல இடங்களில் நம்முடைய முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் திறனை சரியாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், தாமதமாக கூட அதில் வெற்றி கிடைக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே ஏறக்குறைய தோனியின் வழியில் தான் இங்கிலாந்து அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக திட்டம் போட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சற்று முன்