- Advertisement 3-
Homeவிளையாட்டுஇனிமே சரிப்பட்டு வராது.. இந்திய அணியை தோக்கடிக்க பென் ஸ்டோக்ஸ் ஆடப் போகும் புது ஆட்டம்..

இனிமே சரிப்பட்டு வராது.. இந்திய அணியை தோக்கடிக்க பென் ஸ்டோக்ஸ் ஆடப் போகும் புது ஆட்டம்..

- Advertisement 1-

அமோக வரவேற்புடன் சமீப காலமாக டெஸ்ட் போட்டியில் பேஸ்பால் ஆட்டத்தை ஆடிவந்த இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து அதன் காரணமாக கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. டெஸ்டிலே ஏதோ அதிரடியான பேட்டிங்கை அவர்கள் தான் கண்டுபிடித்தது போல, சில முக்கியமான தொடர்களில் ஆடி இருந்த இங்கிலாந்து அணிக்கு இந்திய மண்ணில் ஏனோ அந்த ஆட்டம் சுத்தமாக எடுபடவில்லை.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்டோர் அதிரடியான வீரராக இருந்தாலும், அந்த பாலிசியை அனைவராலும் பின்பற்ற முடியாமல் போக தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஒரு பக்கம் பேஸ்பால் ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் ஆடி வரும் இங்கிலாந்து அணி அதன் மூலம் தொடர்ந்து சாதிக்கப் போகிறதா அல்லது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து இன்னும் அதிக விமர்சனத்தை சந்திக்க போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இங்கிலாந்து அணியை அதன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக வழி நடத்தினாலும் இந்த பேஸ்பால் ஆட்டம் தான் அவர்களுக்கு சிக்கலாக இருக்கிறது என்பது தற்போது பல கிரிக்கெட் பிரபலங்களின் கருத்தாக உள்ளது. அதிலும் இந்திய மண்ணில் அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் ஆடுவதே கடினமான ஒரு விஷயம் தான்.

இதனால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வழக்கம் போல டெஸ்ட் போட்டிகளை ஆடி வெற்றி பெற வேண்டும் என்பது தான் ரசிகர்களின் கோரிக்கையாகவும் உள்ளது. அதே போல, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சும் முதல் போட்டியில் தான் எடுபட்டிருந்ததே தவிர, கடைசி இரண்டு போட்டிகளில் பெரிதாக எடுபடவே இல்லை.

- Advertisement 2-

இந்திய பிட்ச்சை பொறுத்த வரைக்கும் அதிலுள்ள சூழலுக்கு ஏற்ற வகையில் பந்து வீச்சாளர்களை தயார் செய்து அணுக வேண்டும். இந்த நிலையில் தொடர்ந்து பல போட்டிகளில் பந்து வீசாமல் இருந்து வரும் பென் ஸ்டோக்ஸ், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக பந்து வீச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

காயம் காரணமாக தொடர்ந்து பந்து வீசாமல் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வரும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்த முறை பந்து வீசினால் நிச்சயமாக இந்திய அணிக்கு கொஞ்சம் சவால் அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது. ஐபிஎல் போட்டிகள் ஆடி இந்திய மண்ணில் அதிக பழக்கமுள்ள பென் ஸ்டோக்ஸ் பந்து வீசினால் ஒரு வேளை இங்கிலாந்திற்கு சாதகமாக கூட அமையலாம்.

சற்று முன்