- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியாவுக்கு மறைமுக எச்சரிக்கை கொடுத்த பென் ஸ்டோக்ஸ்.. 6 மாசம் முன்பே போர் முரசு ஒலிக்குதே?

இந்தியாவுக்கு மறைமுக எச்சரிக்கை கொடுத்த பென் ஸ்டோக்ஸ்.. 6 மாசம் முன்பே போர் முரசு ஒலிக்குதே?

- Advertisement-

டெஸ்ட் கிரிக்கெட் பொறுத்தவரை தற்போது சிறப்பாக விளையாடும் அணி என்றால் அது இங்கிலாந்து தான். தங்களுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகின் தலைசிறந்த அணிகளை எல்லாம் அவர்கள் அடித்து விரட்டி இருக்கிறார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணியே இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் கதர விட்டது. மழை மட்டும் பெய்யவில்லை என்றால் அந்தத் தொடரில் இங்கிலாந்து அணியை வெற்றி பெற்று இருக்கும். தற்போது இங்கிலாந்து அணிக்கு உள்ள அடுத்த சவால் என்றால் அது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தான்.

ஆனால் இது நடைபெற இன்னும் பல மாதங்கள் இருக்கின்றது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் தான் இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

- Advertisements -

இந்திய மண்ணில் கடைசி ஆக இங்கிலாந்த அணி 2012 ஆம் ஆண்டு தான் டெஸ்ட் தொடரை வென்றது. 11 ஆண்டுகளாக தொடரை வெல்லவில்லை என்பதால் இம்முறை தங்களுடைய பேஸ் பால் திட்டத்தால் இந்தியாவையும் வீழ்த்த வேண்டிய உத்வேகத்தில் பென் ஸ்டோக்ஸ் அணியினர் உள்ளனர்.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய பென் ஸ்டோக்ஸ் தங்களுடைய பேஸ் பால் திட்டம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எடுபடாது என்று கூறினார்கள். தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்துக்கு எதிராக எடுப்படாது என்று சொன்னார்கள்.

- Advertisement-

நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்தின் பேஸ் பால் ஒத்து வராது என்று சொன்னார்கள். அதுவும் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவை எல்லாம் பேஸ் பாலால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னார்கள்.

தற்போது அந்த தொடரும் முடிந்துவிட்டது இனி இந்தியாவை பேஸ் பால் திட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் எல்லாம் சொல்லுகிறார்கள். அதற்கு காலம்தான் பதில் சொல்லும் பொருத்திருந்து பார்ப்போம் என்று பதில் கூறினார்.

சற்று முன்