- Advertisement 3-
Homeவிளையாட்டுபோட்டிக்கு முன்பு சரக்கு போட்ட பென் ஸ்டோக்ஸ். அதிரடியான தகவலை சொல்லி போட்டுக்கொடுத்த சரக்கு பார்ட்னர்

போட்டிக்கு முன்பு சரக்கு போட்ட பென் ஸ்டோக்ஸ். அதிரடியான தகவலை சொல்லி போட்டுக்கொடுத்த சரக்கு பார்ட்னர்

- Advertisement 1-

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. சொந்த மண்ணில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது தாங்கள் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரில் பின்தங்கியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3-ஆவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 6-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த வேலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், முன்னாள் கேப்டனான காலிங் வுட் மற்றும் நட்சத்திர கால்பந்து வீரரான டேல் தாமஸ் ஆகியோர் ஆஷஸ் தொடருக்கு நான்கு நாட்கள் முன்னதாக ஒரு இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய கால்பந்து வீரர் டேல் தாமஸ் கூறுகையில் : ஆஷஸ் தொடருக்கு முன்னதாக ஒரு சனிக்கிழமை இரவில் பென் ஸ்டோக்ஸ், காலிங் வுட், கிரேம் ஸ்மித் ஆகியோருடன் நானும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டேன். அந்த பார்ட்டியில் நாங்கள் ஓட்காவை அருந்தினோம். ஆஷஸ் தொடர் ஆரம்பிப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக நாங்கள் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டோம்.

பென் ஸ்டோக்ஸ் எங்களை அந்த இரவு விடுதிக்கு உள்ளே அழைத்துச் செல்லும்போது ஓட்கா அருந்தியிருந்தார். மேலும் அன்று இரவு வோட்கா பாட்டில்களின் நடுவே டான்ஸ் ஆடி, மது அருந்தி மிகவும் ஜாலியாக நேரத்தை கழித்தார் என்று டேல் தாமஸ் கூறியுள்ளார். இது போன்ற ஒரு கருத்தை டேல் தாமஸ் வெளியிடவே தற்போது ரசிகர்கள் அனைவரும் இதுதான் தோல்விக்கு காரணமா என்ற வகையில் பென் ஸ்டோக்ஸ்ஸை திட்டி வருகின்றனர்.

- Advertisement 2-

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்து இருக்கும் வேளையில் மூன்றாவது போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பாதுகாப்பையும் வழங்க போட்டி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதோடு ஆஸ்திரேலியா டிவி வர்ணனையாளர்கள் மார்க் டெய்லர், ஜோன்ஸ் ஆகியோருக்கும் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஆஸ்திரேலியா சுற்றுல்லா பயணிகளுக்கும் கூடுதலான பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்