- Advertisement 3-
Homeவிளையாட்டுஉலககோப்பைக்கு நான் திரும்ப வரன்... முழங்கால் வலியெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்.. நாட்டுக்காக இத கூட செய்யாட்டி...

உலககோப்பைக்கு நான் திரும்ப வரன்… முழங்கால் வலியெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்.. நாட்டுக்காக இத கூட செய்யாட்டி எப்படி.. ரீஎன்ட்ரிக்கு தயாராகும் முக்கிய வீரர்.

- Advertisement 1-

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட உத்தேச உலகக்கோப்பை அணியை செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கெடு விதித்துள்ளது. இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யும் மும்முரத்தில் இருக்கின்றனர்.

மேலும் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட பின்னர் செப்டம்பர் 27-ஆம் தேதி வரை அதில் மாற்றங்களை செய்வதற்கான கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அணிகளின் வீரர்களின் பட்டியலில் எவ்வித மாற்றமும் செய்யப்பட முடியாது என்பதனால் தற்போது இந்த தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதில் அனைத்து நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே இந்திய அணியில் சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி இதுவரை எப்போது கம்பேக் கொடுப்பார்கள் என்று தெரியாமல் இருக்கும் வேளையில் எவ்வாறு இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்யப் போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.

இந்நிலையில் அதேபோன்று நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் ஏற்கனவே ஓய்வு முடிவை அறிவித்திருந்தாலும் உலகக் கோப்பை தொடருக்காக தனது முடிவை மாற்றி மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம்பெற தயாராக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வரும் பென் ஸ்டோக்ஸ் கடந்த முறை 2019-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலக கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement 2-

இவ்வேளையில் மீண்டும் இந்த உலகக் கோப்பை தொடருக்காக அவர் இங்கிலாந்து அணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதால் பட்லர் கேட்டுக் கொண்டால் அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாட தயாராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பணிச்சுமை காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பென் ஸ்டோக்ஸ் இம்முறை உலகக் கோப்பை தொடருக்காக தனது முடிவை திரும்ப பெற ஆர்வமாக இருக்கிறார்.

அதோடு தற்போது கால் பகுதியில் காயமடைந்திருக்கும் அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயாராக இருந்தாலும் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடிவிட்டு அதன்பின்னர் 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரை புறக்கணித்துவிட்டு அந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக உலக கோப்பை இங்கிலாந்து அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சற்று முன்