- Advertisement 3-
Homeவிளையாட்டுநாங்க தான் தொடரை ஜெயிக்க போறோம்.. தோத்து போயும் கெத்தாக பேசிய பென் ஸ்டோக்ஸ்..

நாங்க தான் தொடரை ஜெயிக்க போறோம்.. தோத்து போயும் கெத்தாக பேசிய பென் ஸ்டோக்ஸ்..

- Advertisement 1-

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், மறுபடியும் ஒரு முறை பேஸ்பால் ஆடும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல், இதுவரை இல்லாத அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் (434 ரன்கள்) வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது.

இங்கிலாந்து அணி இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது டெஸ்டில் அவர்கள் தோல்வி அடைந்திருந்தாலும் அவர்களின் ஆட்டம் இந்திய அணிக்கு ஓரளவுக்கு நெருக்கடியை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு சூழலில், சவால் மிக்க தொடரான இதில், இங்கிலாந்து அணியை 3 வது டெஸ்டில் இந்திய அணி எதிர்கொண்டது.

இதில் முதல் இன்னங்சில் இந்திய அணி, 445 ரன்கள் எடுத்திருந்தது. 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையில் இருந்த இந்தியாவை ரோஹித் மற்றும் ஜடேஜா ஆகியோர் இணைந்து காப்பாற்றினர். இதனையடுத்து தங்களின் பேட்டிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியதால் இந்திய அணிக்கு தலைவலி உருவானது.

ஆனாலும் 2 வது நாளில் சிறப்பாக பந்து வீசிய அவர்கள், அடுத்தடுத்து விக்கெட்டுகளை காலி செய்து 319 ரன்களில் மடக்கினர். 126 ரன்கள் முன்னிலையுடன் 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மீண்டும் ஒரு இரட்டை சதத்துடன் 12 சிக்ஸர்களை பறக்க விட்டிருந்தார்.

- Advertisement 2-

அது மட்டுமில்லாமல், ஆண்டர்சன் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸரை அவர் அடித்திருந்தது இந்த டெஸ்டின் சிறப்பம்சமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்திய அணி 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, 557 ரன்கள் என்ற கடினமான் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவர்கள் முடிந்த அளவுக்கு போராடுவார்கள் என்றே அனைவரும் கருதினர். ஆனால் சீட்டுக்கட்டுகள் போல, இங்கிலாந்தின் விக்கெட்டை காலி செய்தார் ரவீந்திர ஜடேஜா. இவர் ஐந்து விக்கெட்கள் எடுத்து அசத்த, இங்கிலாந்து அணி 4 வது நாளிலேயே 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணியும் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சதமடித்து மொத்தம் ஏழு விக்கெட்டுகள் கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார்.

இந்த தோல்விக்கு பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “பென் டக்கட் அபார இன்னிங்ஸை ஆடினார். அப்படி தான் இன்னிங்ஸ் முழுக்க ஆட வேண்டுமென நினைத்தோம். இந்திய அணியின் ரன்னை நெருங்கவும் நாங்கள் பல முயற்சிகள் செய்தோம். சில நேரங்களில் நாம் போடும் திட்டங்கள் சரியாக வேலை செய்யாது. டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதே எங்களுக்கு முக்கியம்.

3 டெஸ்டின் முடிவில் 1 – 2 என்ற கணக்கில் உள்ளோம். மீதமுள்ள 2 டெஸ்ட்களையும் வென்று தொடரை வெல்ல எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. அந்த இரண்டிலும் வென்று தொடரை கைப்பற்றுவதை நோக்கி தான் நகர உள்ளோம்” என ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

சற்று முன்