- Advertisement 3-
Homeவிளையாட்டுஇங்கிலாந்துக்கு திரும்புகிறாரா பென் ஸ்டோக்ஸ்? சி.எஸ்.கே. அணிக்கு பெரும் பின்னடைவு

இங்கிலாந்துக்கு திரும்புகிறாரா பென் ஸ்டோக்ஸ்? சி.எஸ்.கே. அணிக்கு பெரும் பின்னடைவு

- Advertisement 1-

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே அணி ரூ. 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடவில்லை. ஒரு மாதத்திற்கும் மேலாக காயத்தால் ஓய்வுபெற்று வந்த அவர் இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார். அவரின் காயம் விரைவில் குணமாகி அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

மே 20 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸின் இறுதி குரூப்-ஸ்டேஜ் போட்டி நடக்கிறது. இந்த ஆட்டத்துக்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்ப உள்ளார். ஒருவேளை சிஎஸ்கே ப்ளே ஆஃப் தகுதி பெற்றால் அணியில் ஸ்டோக்ஸ் இருக்கமாட்டார் என கூறப்படுகிறது.

ஜூன் 1 ஆம் தேதி இங்கிலாந்தின் லார்ட்ஸில் அயர்லாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து திரும்புவார் என சொல்லப்படுகிறது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுடன் ஜூன் 16 அன்று எட்ஜ்பாஸ்டனில் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து தனது முதல் டெஸ்டில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷஸ் தொடருக்கு முன்பாக அயர்லாந்து டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

புள்ளிப்பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி, எப்படியும் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செல்லும் பட்சத்தில் ஸ்டோக்ஸ் அணியில் இணைந்தால் அது அணிக்கு பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படது. ஆனால் லீக் போட்டிகளோடு ஸ்டோக்ஸ் இங்கிலாந்து திரும்புவது அணிக்கு பின்னடைவாக அமையும்.

- Advertisement 2-

இந்த தகவல் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. தோனிக்குப் பின்னர் சிஎஸ்கே அணியை வழிநடத்தும் வீரர்களின் பட்டியலில் பென் ஸ்டோக்ஸும் இருக்கிறார். இந்நிலையில் இந்த சீசனில் அணிக்காக அவரின் பங்களிப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

சற்று முன்