- Advertisement 3-
Homeவிளையாட்டுஇன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பென் ஸ்டோக்ஸ்? சி எஸ் கே ரசிகர்களுக்கு அடுத்த மகிழ்ச்சி செய்தி!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பென் ஸ்டோக்ஸ்? சி எஸ் கே ரசிகர்களுக்கு அடுத்த மகிழ்ச்சி செய்தி!

- Advertisement 1-

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் 49வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மாலை 3.30 மணிக்கு மோதுகின்றன. இந்த பரபரப்பான ஆட்டம் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை சி எஸ் கேவும் மும்பையும் இரண்டுமே சூப்பர் ஸ்டார் அணிகள். இரு அணிகளும் சேர்ந்து 9 முறை கோப்பையை வென்றுள்ளன. சென்னை அணியை அதிகமுறை வெற்றி பெற்ற அணி என்ற பெருமையும் மும்பை இந்தியன்ஸ் வசமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய போட்டி ஹை வோல்டேஜ் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த  சி எஸ் கே ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்குள் திரும்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே அணி ரூ. 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஒரு மாதத்திற்கும் மேலாக காயத்தால் ஓய்வுபெற்று வந்த அவர் இன்றைய போட்டியில் அணிக்கு திரும்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அணிக்குள் ஸ்டோக்ஸ் வந்தால், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா வெளியேற வாய்ப்புள்ளது. தீக்ஷனா எதிர்பார்த்தபடி சில போட்டிகளாக செயல்படவில்லை. அவர் அதிக ரன்களை மிடில் ஓவர்களில் விட்டுக் கொடுக்கிறார். மேலும் அவரது பீல்டிங்கும் மிகவும் மோசமாக உள்ளது. பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றால் சென்னை அணியின் பின்வரிசை பேட்டிங்குக்கும் கூடுதல் பலம் சேரும். ஸ்டோக்ஸ் இடம்பெறுவதற்கு போதுமான தகுதி இல்லை எனில், சிஎஸ்கே நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னரை சேர்க்கலாம். சேப்பாக்கம் பாதையில் மும்பை இந்தியன்ஸ் பேட்டர்களுக்கு அவர் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.

- Advertisement 2-

சிஎஸ்கே உத்தேச அணி
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, பென் ஸ்டோக்ஸ்/மகேஷ் தீக்ஷனா, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (சி. தீபக் சஹார்ர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே.

சற்று முன்