- Advertisement 3-
Homeவிளையாட்டு15 போர்.. 6 சிக்ஸ்.. 182 ரன்... இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றிலேயே நடக்காத நிகழ்வு... சாதித்து...

15 போர்.. 6 சிக்ஸ்.. 182 ரன்… இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றிலேயே நடக்காத நிகழ்வு… சாதித்து காட்டிய பென் ஸ்டோக்ஸ்.. நடந்தது என்ன?

- Advertisement 1-

உலகக்கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன. இந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டி லண்டனில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் டக் அவுட்டிலும், ரூட் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்த நிலையில் மலான் – பென் ஸ்டோக்ஸ் இணை சேர்ந்தது.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ், 44 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன்பின் பென் ஸ்டோக்ஸின் அதிரடி அடுத்த லெவலுக்கு சென்றது. ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சர், பவுண்டரி என்று விளாசி மிரட்டினார். இதன் மூலமாக பென் ஸ்டோஸ் 76 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு மீண்டும் தனது வருகையை அறிவித்தார்.

சதம் விளாசிய பின்னர் தனது தந்தையை நினைவு கொள்ளும் வகையில் வானத்தை பார்த்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் அடிக்கும் 4வது சதமாகும். பின்னர் பென் ஸ்டோக்ஸ் விக்கெட் கொடுப்பதை கவலை கொள்ளாமல் அதிரடியை தொடர்ந்தார். இதன் மூலமாக 106 பந்துகளில் 150 ரன்கள் சேர்த்தார்.

- Advertisement 2-

அரைசதத்தை எப்படி சிக்சர் அடித்து எட்டினாரோ, அதேபோல் 150வது ரன்னை சிக்சர் மூலமாகவே எட்டினார். ஒரு கட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் பேஸ் பால் பாணியை ஒருநாள் கிரிக்கெட்டிலும் பென் ஸ்டோக்ஸ் செய்ய தொடங்கியது தெரிய வந்தது. இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 40 ஓவர்களிலேயே 300 ரன்களை கடந்தது.

நிச்சயம் இரட்டை சதத்தை விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 124 பந்துகளில் 182 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோரை பென் ஸ்டோக்ஸ் எட்டி சாதனை படைத்தார். அதேபோல் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் விவியன் ரிச்சர்ட்ஸ்-க்கு பின் அதிகபட்ச ஸ்கோரை விளாசிய வீரர் என்ற சாதனையையும் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இறுதியாக இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் 368 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது.

சற்று முன்