இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் நடந்தது. நான்கு போட்டிகள் கொண்டு இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் நியூசிலாந்த அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியானது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்ஜானி பேர்ஸ்டோவ் பூஜ்ஜியம் ரன்களுக்கு அவுட் ஆனது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. எனினும் மற்றொரு துவக்க வீரரான டேவிட் மாலன் தனது நிதானமான ஆட்டத்தின் மூலம் அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்திக் கொண்டே வந்தார்.
அதற்கு அடுத்து களம் இறங்கிய ஜோ ரூட் வெறும் நான்கு ரன்களுக்கு அவுட் ஆக, டேவிட் மாலன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டேவிட் மாலன் 95 பந்துகளில் 96 ரன்கள் எடுக்க, மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 124 பந்துகளில் 182 ரன்கள் அடித்தார்.
இதில் ஒன்பது சிக்ஸராகள் மற்றும் 15 பவுண்டரிகள் அடக்கம். இவர் அடித்த பௌண்டரி மற்றும் சிக்ஸரை மட்டும் கணக்கிட்டு பார்த்தால் 24 பந்துகளில் 114 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் தனது நான்காவது சதத்தை பதிவு செய்தார் பென் ஸ்டோக்ஸ். இவர் தனது அரை சதத்தையும் 150 ரங்களையும் கடக்கும் போது அதை சிக்ஸர் மூலமே கடந்தார். அதேசமயம் இவர் அடித்துள்ள இந்த 182 ரன்கள் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் தனி நபர் ஒருவர் அடித்த அதிகப்பெற்ற ரன் ஆகும்.
டேவிட் மாலன் மற்றும் பென் ஸ்டோக்ஸ்சை தவிர மற்ற வீரர்கள் யாரும் அந்த அணியில் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. அதன் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ 48.1 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 368 ரன்கள் குவித்தது.
அடுத்து பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி மிகவும் சுமாராகவே விளையாடியது. துவக்க வீரர்களான டெவோன் கான்வே மற்றும் வில் யங் சொற்ப ரன்களில் வெளியேற, அடுத்தடுத்து வந்த வீரர்களான ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல் என பலரும் தங்களது விக்கெட்டை தொடர்ந்து இழந்து கொண்டே வந்தனர்.
BEN STOKES!
That's it. That's the caption. 😳 #ENGvNZ pic.twitter.com/T8xjw7T1jK
— FanCode (@FanCode) September 13, 2023
க்ளென் பிலிப்ஸ் மட்டும் 76 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். மற்றபடி வேறு யாரும் பெரிதாக ரன்களை அடிக்காததால் அந்த அணி 39 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை மட்டுமே குவித்தது .இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. அடுத்து நான்காவது போட்டி நடக்க உள்ளதால் அந்த போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால் இந்த தொடர் டிராவல் முடியும். ஒருவேளை நியூசிலாந்து அணி வென்றால் அந்த அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது