- Advertisement 3-
Homeவிளையாட்டுஏ எப்புட்றா... பௌண்டரி லைனுக்கு வெளியில் சென்று கேட்ச் பிடித்து அவுட் ஆக்கிய பென்... அசந்து...

ஏ எப்புட்றா… பௌண்டரி லைனுக்கு வெளியில் சென்று கேட்ச் பிடித்து அவுட் ஆக்கிய பென்… அசந்து போன பேட்ஸ்மேன்

- Advertisement 1-

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜூலை 27-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியா அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த டெஸ்ட் தொடரை சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் விளையாடி வருகிறது.

இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 283 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 295 ரன்கள் குவித்து 12 ரன்கள் முன்னிலையுடன் தங்களது முதல் இன்னிங்சை முடித்து கொண்டது. இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிவிலேயே இரண்டு அணிகளும் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி விட்டதால் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி 12 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாட இருக்கிறது.

- Advertisement 2-

இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாம் நாளான நேற்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அடித்த பந்தை பவுண்டரி லைனில் இருந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி ஜோ ரூட் வீசிய பந்தினை சிக்சருக்கு தூக்கி அடிக்க முயன்ற பேட் கம்மின்ஸ் லெக் சைடு திசையில் தூக்கி விளாசினார். அந்த பந்தினை பவுண்டரி லைனில் இருந்த பென் ஸ்டோக்ஸ் சரியாக எகறி பிடிக்கும் போது பந்து வேகமாக சென்றதால் அவர் பவுண்டரி லைனை தாண்டி பின்னோக்கி செல்ல வேண்டியதாயிற்று. அப்போது அதை கணித்து சுதாரித்துக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் பந்தினை தூக்கி போட்டுவிட்டு பவுண்டரி லைனுக்கு பின்னால் சென்றார். பிறகு மீண்டும் உள்ளே வந்த அவர் அந்த கேட்சை பூர்த்தி செய்து விக்கெட்டை கொண்டாடினார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்