- Advertisement -
Homeவிளையாட்டுஇந்திய பேட்ஸ்மேன்களை நான் தூக்கறன்... எங்களாலையும் ஜெயிக்க முடியும்.. சவால் விடும் வகையில் பேசியுள்ள அயர்லாந்து...

இந்திய பேட்ஸ்மேன்களை நான் தூக்கறன்… எங்களாலையும் ஜெயிக்க முடியும்.. சவால் விடும் வகையில் பேசியுள்ள அயர்லாந்து பௌலர்

- Advertisement-

அயர்லாந்து கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்திய அணிக்கு எதிராக அயர்லாந்து அணி எவ்வாறு தாக்கு பிடிக்கப்போகிறது என்று சில கருத்துக்கள் இருந்து வந்தாலும் தங்களது அணியால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று அயர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் பெஞ்சமின் ஒயிட் தனது கருத்தினை அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : எந்த ஒரு அணியாக இருந்தாலும் எங்களுடைய நாளாக இருந்தால் நிச்சயம் எங்களால் அவர்களை வீழ்த்த முடியும். எப்பொழுதுமே ஒரு அணியாக எங்களால் முடியும் என்கிற நம்பிக்கையை நாங்கள் வைத்துள்ளோம். இந்தியா போன்ற பெரிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடும் போது பெரிய சவால் இருக்கும்.

இருந்தாலும் நாங்கள் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என பெஞ்சமின் ஒயிட் கூறினார். மேலும் இந்த தொடரில் சஞ்சு சாம்சனின் விக்கெட்டை வீழ்த்துவது என்னுடைய விருப்பமாக உள்ளது என்று தவிர்த்த அவர், எந்த ஒரு வீரரையும் ஆட்டம் இழக்க வைத்தாலும் மகிழ்ச்சி தான் என்றும் கூறியுள்ளார்.

இந்திய அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். இந்திய வீரர்கள் அனைவருமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நன்றாக விளையாடக் கூடியவர்கள். எனவே அவர்களுக்கு எதிராக நான் ஒரு பிரத்யேகமான திட்டத்தை செயல்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புகிறேன்.

- Advertisement-

நிச்சயம் இந்த தொடரில் என்னுடைய சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். கடந்த முறை இந்திய அணி அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அந்த அணியை இந்திய அணி வாஷ் அவுட் செய்திருந்த வேளையில் தற்போது அயர்லாந்து வீரர் பெஞ்சமின் இந்திய அணியை வீழ்த்துவோம் என்று அளித்துள்ள இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் இதுவரை அந்த அணிக்காக 18 டி20 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்