- Advertisement 3-
Homeவிளையாட்டுபந்து ஸ்விங் ஆகி எவ்ளோ நாளாச்சு.. ஜெயிக்கணும்னு நாங்க பிளானே பண்ணல, ஆனா.. உற்சாகமான புவி..

பந்து ஸ்விங் ஆகி எவ்ளோ நாளாச்சு.. ஜெயிக்கணும்னு நாங்க பிளானே பண்ணல, ஆனா.. உற்சாகமான புவி..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த திரில்லர் போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி இருந்த போட்டி. 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வந்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை.

ஆனாலும் மிடில் ஓவர்களில் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டு போட்டியையும் மிக நெருக்கமாக கொண்டு வர உதவி செய்திருந்தனர். இதனால் ராஜஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக மாறி இருக்க, கடைசி ஓவரில் 13 ரன்கள் வேண்டும் என்ற நிலை இருந்தது.

இந்த ஓவரை மிகச் சிறப்பாக வீசி இருந்த புவனேஸ்வர் குமார், கடைசி பந்தில் இரண்டு ரன்கள் வேண்டும் என்ற சூழலில் இருந்த போதும் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டாக அதனை மாற்றி ஒரு ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி திரில் வெற்றி பெறவும் உதவி செய்திருந்தார். முதல் ஓவரில் சஞ்சு சாம்சன் மற்றும் பட்லர் ஆகியோரின் விக்கெட்டை எடுத்த புவனேஸ்வர் குமார், கடைசி ஓவரில் போவெல் விக்கெட்டை வீழ்த்தி ஹைதராபாத் அணியின் வெற்றியையும் உறுதி செய்திருந்தார்.

இதனால் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்த புவனேஸ்வர் குமார் இதற்குப் பின் பேசுகையில், “நான் எப்போதும் அமைதியாக இருப்பது தான் என்னுடைய குணமாகவே உள்ளது. எனது செயல் திட்டங்களை பற்றி தான் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். கடைசி ஓவரில் என்ன நடக்கும் என்பதை பற்றி நான் எதையுமே சிந்திக்காமல் தான் ஆடினேன்.

- Advertisement 2-

கம்மின்ஸ் என்னிடம் வந்து அனைத்தும் நன்றாக உள்ளதா என்று மட்டும் தான் கேட்டார். நாங்கள் அதிகமாக எந்த விஷயத்தை பற்றியும் உரையாடாமல் தான் செயல்பாட்டில் மட்டும்தான் கவனம் செலுத்தி இருந்தேன். கடைசி இரண்டு பந்துகள் வரை போட்டியை கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவு செய்திருந்தோம். அதன்பின் என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று நினைத்திருந்தோம்.

இந்த போட்டியில் தான் முதல் முறையாக பந்து அதிகம் ஸ்விங் இருந்தது. கடைசியாக அது எப்போது நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை. ஆனாலும் இதனை ரசித்து செய்திருந்தேன். பந்து ஸ்விங் ஆகும்போது எப்போதுமே நீங்கள் விக்கெட் எடுக்க முயற்சி செய்வீர்கள். அதிர்ஷ்டவசமாக எனக்கும் அது கிடைத்துவிட்டது. நாங்கள் எப்போது பந்து வீசினாலும் எதிரணியினரை 200-க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்து செயல்பட்டு வருகிறோம்” என புவனேஸ்வர் குமார் கூறினார்.

சற்று முன்