வீடியோ: 350 ஸ்ட்ரைக் ரேட்… 6, 6 என பரந்த பால்.. நான் பவுலர் மட்டும் இல்லடா பேட்ஸ்மேனும் கூட என காட்டிய புவனேஸ்வர் குமார்

- Advertisement -

இந்திய அணிக்காக 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகளையும், 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகளையும், 87 டி20 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர் புவனேஷ்வர் குமார். இந்திய அணிக்காக 2012ஆம் ஆண்டு அறிமுகமான புவனேஷ்வர் குமார், பவர் பிளே ஓவர்களில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர்.

ஆனால் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். குறிப்பாக சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் எழுச்சி 33 வயதாகும் புவனேஷ்வர் குமாரை இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டியது. கடைசியாக ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார், 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அண்மையில் புவனேஷ்வர் குமார் அளித்த பேட்டியில் கூட, இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று விளையாடவில்லை. நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். அதனால் எனது கிரிக்கெட்டை நான் மிகவும் மகிழ்ச்சியாக விளையாட ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

புவனேஷ்வர் குமார் சொன்னதை களத்திலும் செய்து வருகிறார். தமிழ்நாடு பிரீமியர் லீக் போல் ஒவ்வொரு மாநிலத்தில் டி20 லீக் போட்டிகள் இளைஞர்களை தயார்ப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உத்தரப் பிரதேச டி20 லீக் போட்டியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் நொய்டா அணிக்காக நட்சத்திர அனுபவ வீரர் புனவேஷ்வர் குமார் விளையாடி வருகிறார். இந்த நிலையில் மீரட் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் புனவேஷ்குமார் களமிறங்கினார். கடைசி ஓவரை மீரட் அணியின் டொய்லா வீச, அந்த ஓவரின் 3 பந்துகளில் 2 சிக்சர்களை விளாசி அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்துள்ளார் புவனேஷ்வர் குமார். இவர் இந்த போட்டியில் மொத்தம் 14 ரன்கள் விளாசினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 350 ஆக இருந்தது.

புவனேஷ்வர் குமாரின் பேட்டிங் வீடியோ ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அணிக்காக சில அரைசதங்கள் விளாசி இருந்தாலும், சிக்சர்களை அடிக்கும் அளவிற்கு புவனேஷ்வர் குமார் உறுதியாக இருந்ததில்லை. ஆனால் கடைசி காலத்தில் அசால்ட்டாக சிக்சர் அடிப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்