இந்திய கிரிக்கெட் அணியின் பலதரப்பட்ட வெற்றிகளுக்கு காரணம் ஒரு பக்கம் பேட்ஸ்மேன்கள் என்றாலும் மறுபக்கம் பவுலர்கள் என்று கூற வேண்டும். ஆரம்ப கால தொட்டு இன்றுவரை பௌலர்களின் ஆதிக்கம் இந்திய அணியில் நிச்சயம் இருக்கிறது என்றே கூற வேண்டும். அதிலும் குறிப்பாக ஃபாஸ்ட் பவுலர்கள் இந்திய அணியில் கொண்டாடப்படும் ஒரு வீரர்களாகவே இருந்துள்ளனர்.
ஆரம்ப காலகட்டங்களில் அணியில் ஒரு சில வேகப்பந்து பேச்சாளர்கள் மட்டுமே இருந்திருந்தாலும் தற்போது வேக பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது என்று கூற வேண்டும். சிராஜ், சமி, உமேஷ் யாதவ் இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த பட்டியலில் இடம்பெற வேண்டிய முக்கியமான ஒரு பெயர் புவனேஸ்வர் குமார்.
வேக பந்தில் ஸ்விங் செய்யக்கூடிய அற்புதமான பவுலரான இவர் சில காலங்களாக இந்திய அணிக்கு தேர்வாகாமல் இருக்கிறார். 2023 ஐபிஎல் இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இவர் 14 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவர் தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் உள்ளார் என்றே கூற வேண்டும். இந்த நிலையில் இது குறித்து அவர் பேசுகையில்,
ஒரு ஃபாஸ்ட் பௌலராக நாம் நமது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் உள்ளோம் என்பதை உணரும் போது அது நமக்கு வலியை கொடுக்கும். எனினும் இந்த ஒரு நிலையில் நாம் கிரிக்கெட்டை அனுபவிக்க வேண்டும். ஆம் நான் தற்போது இந்திய அணியின் ஒரு அங்கமாக இல்லை. ஆனால் அதற்காக நான் கவலைப்படவும் இல்லை. அதேசமயம் இந்திய அணியில் மீண்டும் இணைவதற்காக புதிய முயற்சிகளையோ, திட்டமிடலையோ நான் செய்யவில்லை. என்னுடைய விளையாட்டில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறேன்.
கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் விளையாடுவது இல்லை. ஒரு சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நான் தற்போது செய்து வருகிறேன். ஒருவேளை நான் இந்திய அணியில் மீண்டும் இணையலாம். ஆனால் அது என்னுடைய நோக்கம் கிடையாது.
எந்த பார்மெட் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, எந்த லீக் போட்டிகளாக இருந்தாலும் சரி நான் என்னுடைய பணியை சிறப்பாக செய்ய வேண்டும். எல்லாம் சரியாக நடந்தால் இந்திய அணியில் மீண்டும் நான் கம்ப கொடுப்பேன். ஆனால் அது மட்டுமே என்னுடைய நோக்கம் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் யூ.பி.யில் நடக்கும் லீக் தொடரை பற்றிய அவர் பேசுகையில், இது போன்ற லீக் தொடர்கள் சிறந்த வீரர்களை கண்டெடுக்க உதவும். ஒரு வீரரை நெட்டில் பார்ப்பதற்கும் களத்தில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதேபோல் ஒரு வீரருக்கான பணம் சார்ந்த பாதுகாப்பு லீக் தொடரின் மூலம் கிடைக்கிறது. நிச்சயம் வருங்காலத்தில் இது இன்னும் பன்மடங்கு பெருகும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.