- Advertisement -
Homeவிளையாட்டுஇனி விளையாடுனா ஆபத்து தான்.. போட்டிய பாதியிலேயே நிறுத்திய நடுவர்.. வினோத காரணத்தால் குழம்பிய ரசிகர்கள்..

இனி விளையாடுனா ஆபத்து தான்.. போட்டிய பாதியிலேயே நிறுத்திய நடுவர்.. வினோத காரணத்தால் குழம்பிய ரசிகர்கள்..

- Advertisement-

இந்தியாவில் ஐபிஎல் டி 20 லீக் தொடர்கள் ஆரம்பமான பிறகு, அந்த தொடருக்கென்றே பிரத்யேகமாக ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. ஒவ்வொரு தொடரிலும் அனைத்து சர்வதேச அணிகளின் வீரர்களும் இணைந்து ஆடுவதால் போட்டிகளை பார்ப்பதற்கே மிகுந்த ஆரவாரமாக இருக்கும். ஐபிஎல் தொடர் வெற்றி பெற்றதன் காரணமாக, 2023 ஆம் ஆண்டில் மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரும் ஆரம்பமானது.

WPL தொடரின் முதல் சீசனில் மும்பை அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது. தொடர்ந்து, 2 வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், இதற்கான ஏலமும் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. இதே போல, ஆடவர்களுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலமும் அடுத்த வாரம் துபாயில் வைத்து நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது திட்டம் போட்டு தயாராகி வருவதாகவே தெரிகிறது.

- Advertisement -

ஆனால் ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே பிரபலமான டி 20 லீக் தொடர் என்றால் அது பிக்பேஷ் லீக் தொடர் தான். ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெறும் இந்த தொடரில் பல நாட்டு வீரர்கள் பங்கேற்கும் நிலையில், அதிரடிக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் இந்த தொடர் செல்லும். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிக்பேஷ் லீக் தொடர் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிக்பேஷ் லீக் தொடரில் நடைபெற இருந்த போட்டி ஒன்று பாதியிலேயே நிறுத்தப்பட்ட காரணம், ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மெல்போர்ன் மற்றும் பெர்த் அணிகள் ஆடி வந்த போட்டியில் முதலில் பெர்த் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த போது போட்டியை நிறுத்தும்படி நடுவர் முடிவு எடுத்தார்.

- Advertisement-

முதலில் இருந்தே பந்துகள் அதிகம் எகிறிய நிலையில், சில பந்துகளுக்கு பிறகு பிட்ச்சும் பெயர்ந்து போனதாக தெரிகிறது. இதனால், பேட்ஸ்மேன் முகத்தை நோக்கி பந்து செல்ல, தொடர்ந்து ஆடுவது ஆபத்தாக மாறும் என்றும் நடுவர் பயந்துள்ளார். போட்டிக்கு முன்பாக, சிறிது மழை பெய்ய அந்த நீரின் காரணமாக பிட்ச்சில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இது பற்றி பேட்ஸ்மேன்களும் நடுவர்களிடம் முறையிட கலந்து ஆலோசித்த அவர்கள் பின்னர் போட்டியை கைவிடுவதாக அறிவித்தார்கள். மழை பெய்து போட்டி நிறுத்தப்படுவது ஒரு பக்கம் இருக்கையில், பிட்ச்சில் உள்ள ஆபத்து காரணமாக போட்டியே பாதியில் நின்ற சம்பவம், கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.

சற்று முன்