நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி 4வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2019 உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
அதேபோல் இந்த போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவும் பறிபோயுள்ளது. தொடர்ச்சியாக 5 உலகக்கோப்பை தொடர்களில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து 5வது முறையாக கோப்பையை வெல்ல முடியாமல் பரிதாபமாக வெளியேறியுள்ளது.
அதேபோல் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு இது கடைசி உலகக்கோப்பை தொடராகும். இதனால் கேன் வில்லியம்சனுக்காக இந்திய ரசிகர்கள் பலரும் சோஅமடைந்து வருகின்றனர். இந்த தோல்வியை பற்றி வில்லியம்சன் பேசும் போது, இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். ஏனென்றால் சிறந்த கிரிக்கெட்டை ஆடி இருக்கிறார்கள்.
டாப் அணியாக இருந்த இந்தியா, டாப் கிரிக்கெட்டை விளையாடியுள்ளது. அவர்கள் மிகச்சிறந்த கிரிக்கெட்டை ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தினார்கள். எங்கள் அணியின் வெற்றிக்காக போராடினார்கள் என்று சொல்லலாம். 5வது முறையாக நாக் அவுட் போட்டியில் தோல்வியடைந்துள்ளோம். இது கொஞ்சம் சோகத்தை கொடுக்கிறது. ஏமாற்றத்துடன் இந்தியாவில் இருந்து செல்கிறோம்.
சர்வதேச தரத்திலான வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். அவர்கள் இன்று சர்வதேச தரத்திலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 400 ரன்களை எட்டினார்கள். அதுபோன்ற மாபெரும் இலக்கை சேசிங் செய்வது சாதாரணமல்ல. அதனால் இந்திய அணியை பாராட்ட வேண்டும். எங்களை விடவும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள். ரசிகர்கள் சிறந்த ஆதரவை அளித்தார்கள். ஆனால் இந்திய அணிக்கு தான் அதிக ஆதரவு இருந்தது.
இந்தியா வந்தது ஸ்பெஷலாக உள்ளது. ஒரு அணியாக சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று பிடிவாதத்துடன் உள்ளோம். ரச்சின் மற்றும் மிட்சல் இருவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு ஸ்பெஷல் தொடராக அமைந்தது. நிச்சயம் சிறப்பாக போராடினோம். ஒரு அணியாக அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுவோம் என்று கூறினார்.