- Advertisement 3-
Homeவிளையாட்டுமுதல் டெஸ்ட்ல இந்தியா தோத்து போயிடுமா.. அட போங்க பாஸ்.. ரோஹித் படை போடும் அதிரடி...

முதல் டெஸ்ட்ல இந்தியா தோத்து போயிடுமா.. அட போங்க பாஸ்.. ரோஹித் படை போடும் அதிரடி பிளான்

- Advertisement 1-

இன்றைய காலத்தில் டி 20 போட்டிகள் காரணமாக டெஸ்ட் போட்டிகளை பெரிய அளவில் ரசிக்க யாருமில்லை என்பது தான் உண்மை. ஆனால், அதே வேளையில் சில முக்கியமான டெஸ்ட் போட்டிகள் வரும் போது ஒட்டுமொத்த பேரும் ஏதோ உலக கோப்பை இறுதி போட்டியை பார்ப்பது போல டிவிக்குள் மூழ்கி கிடப்பார்கள். அப்படி ஒரு போட்டியாக தான் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் டெஸ்ட் போட்டி அமைந்துள்ளது.

இந்திய மண்ணில் பொதுவாக எதிரணியினர் தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட்டாலே அது ஒரு பெரிய வெற்றி தான். அந்த வகையில், தற்போது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. இந்திய அணியின் சுழல் தாக்குதல் முதல் இன்னிங்சில் இந்தியாவிற்கு பெரிய அளவில் கை கொடுத்தது.

ஆனால், இரண்டாவது இன்னிங்சில் அப்படியே சற்று நேர்மாறாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணி வீரர் ஒல்லி போப், தனி ஒரு ஆளாக நேர்த்தியாக பேட்டிங் செய்து அந்த அணியையும் சரிவில் இருந்து மீட்டு ஓரளவுக்கு இங்கிலாந்து அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். அவரது உதவியால் சுமார் 126 ரன்கள் வரைக்கும் முன்னிலை பெற்றுள்ளதால், இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்சில் சவால் காத்திருக்கிறது என்று தான் தெரிகிறது.

மீதமுள்ள 4 விக்கெட்டுகளை இந்திய அணி இன்று வேகமாக எடுக்கும் பட்சத்தில் நெருக்கடி இல்லாமல் இலக்கை நோக்கி ஆட அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால், ஒல்லி போப் தொடர்ந்து ரன் அடித்தால் நிச்சயம் இந்திய அணிக்கு தலைவலி தான். இதனால், இந்த போட்டியின் முக்கியமான கட்டமாக நான்காவது நாளில் முதல் செஷன் இருக்கும் என தெரிகிறது.

- Advertisement 2-

இந்த நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்பரே இந்திய அணி வெற்றி பெறும் என தன்னம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் எந்த விதமான இலக்கை நோக்கியும் ஆடவில்லை. முடிந்த வரை அவர்களின் விக்கெட்டுகளை வேகமாக எடுத்து அவர்கள் ரன்களை குறைப்பதை தான் நோக்கமாக வைத்துள்ளோம்.

மற்றபடி அவர்கள் கொடுக்க போகும் இலக்கை நினைத்து நாங்கள் எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கவும் விரும்பவில்லை. பிட்ச் இன்னும் மெதுவாக மாறும் பட்சத்தில் பந்து கொஞ்சம் திரும்பும் என்றே நான் நினைக்கிறேன். இந்தியாவின் துணை கண்டங்களில் இருப்பது போன்ற டர்ன் இல்லாமல், சற்று கூர்மை நிறைந்த டர்னாக இருக்கும் என்றே தெரிகிறது” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்