- Advertisement -
Homeவிளையாட்டு140 கி.மீ வேகம்...செமையா பவுலிங் போடறாரு.. இந்திய அணியில் விக்கெட் டேக்கர் பவுலர் ரெடி... பவுலிங்...

140 கி.மீ வேகம்…செமையா பவுலிங் போடறாரு.. இந்திய அணியில் விக்கெட் டேக்கர் பவுலர் ரெடி… பவுலிங் கோச் சொன்ன குட் நியூஸ்

- Advertisement-

இந்திய அணியில் சமீபகாலமாகவே பந்துவீசும் பேட்ஸ்மேன்கள் தேவை என்கிற சூழல் அதிகரித்துள்ளது. ஏனெனில் முறையான ஐந்து பந்துவீச்சாளர்களுடன் செல்லும் இந்திய அணியில் ஏதாவது ஒரு பந்துவீச்சாளர் அடி வாங்கும் பட்சத்தில் பந்துவீச தெரிந்த ஒரு வீரர் அணியில் இருந்தால் அது கூடுதல் சாதகத்தை அளிக்கும். ஏனெனில் ஒரு பந்துவீச்சாளர் அன்றைய நாளில் பேட்ஸ்மேன்களிடம் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தால் கேப்டன் மீதமுள்ள வீரர்களை பகுதிநேர பந்துவீச்சாளர்களாய் வைத்து வீச முடியும்.

ஆனால் இந்திய அணியில் தற்போது பேட்ஸ்மேன்கள் யாரும் பந்துவீச வில்லை என்பதால் அது ஒரு குறையாகவே இருந்து வருகிறது. வேறு எந்த வீரரும் பெரிய அளவில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பிரகாசிக்கவில்லை.

அதேவேளையில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற அணிகள் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையும் செய்யும் வீரர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய அணியும் ஆல்ரவுண்டர்களை பலப்படுத்தி வருகிறது.

ஏற்கனவே ஜடேஜா, ஹார்டிக் பாண்டியா ஆகியோர் இருந்தாலும் பகுதி நேரமாக ஒரு சில ஓவர்களை வீசும் வீரர்களை தேடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாண்டியா தற்போது பந்துவீச்சில் முதிர்ச்சி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி அடைவதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement-

மேலும் பாண்டியா குறித்து பேசி அவர் கூறுகையில் : ஹர்திக் பாண்டிய தன்னை சிறப்பாக மெருகேற்றிக்கொண்டுள்ளார். இதற்காக தான் நாங்கள் நீண்ட காலமாக உழைத்து வந்தோம். நாங்கள் தற்போது அவருடைய பணிச்சுமையை நிர்வகித்து வருகிறோம். அவருடைய உடல் தகுதியும், பந்துவீசும் திறனையும் தற்போது கண்காணித்து வருகிறோம். முன்பை விட அவர் தற்போது பல மடங்கு தன்னுடைய திறனில் உழைத்து உள்ளார். பாண்டியா ஒரு முறை 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசிவிட்டால் நிச்சயம் அவர் வித்தியாசமான பந்துவீச்சாளராக இருப்பார்.

அணியின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அவர் ஒரு விக்கெட் டேக்கிங் பவுலராக இருக்கிறார். மேலும் திலக் வர்மாவை நாங்கள் அண்டர் 19 காலத்திலிருந்து பார்த்து வருகிறோம். அவருடைய பந்துவீசும் திறன் அப்போதே எங்களுக்கு தெரியும். அவரையும் நாங்கள் தொடர்ச்சியாக பந்துவீச்சில் முன்னேற்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்