- Advertisement 3-
Homeவிளையாட்டுஅப்படி நடந்தா தென் ஆப்பிரிக்கா தான்.. இந்தியாவே வந்தாலும் முடியாது.. ஆஸி. முன்னாள் வீரரின் பரபர...

அப்படி நடந்தா தென் ஆப்பிரிக்கா தான்.. இந்தியாவே வந்தாலும் முடியாது.. ஆஸி. முன்னாள் வீரரின் பரபர கருத்து..

- Advertisement 1-

டி 20 உலக கோப்பைத் தொடர் தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதி போட்டியில் முன்னேற போகும் 2 அணிகள் எவை என்பதும், கோப்பையை வெல்ல போகும் அணிகள் எவை என்பதையும் மட்டும் தெரிந்து கொள்வது தான் பாக்கி உள்ளது. முன்னதாக இந்த டி 20 தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக எந்த 4 அணிகள் அரையிறுதி முன்னேறும் என்பது பற்றி கிரிக்கெட் பிரபலங்கள் தொடங்கி கிரிக்கெட் நிபுணர்கள் வரை பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகளை தான் அதிகமாக தேர்வு செய்து வந்தனர். அதிலும் சிலர் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் இறுதி போட்டிக்கும் முன்னேறும் என்று கூட தெரிவித்து வந்தனர். ஆனால், ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா உள்ளிட்ட அணிகள் அந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் அரையிறுதிக்கும் முன்னேறி உள்ளது.

மேலும் இந்த இரண்டு அணிகளும் முதல் அரையிறுதி போட்டியில் மோதவுள்ள நிலையில், இதில் எந்த அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறினாலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சந்தோஷம் தான். இதற்கு காரணம், அந்த இரண்டு அணிகளுமே இதுவரை ஒரு முறை கூட ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது கிடையாது என்பது தான்.

இதனால், அப்படி ஒரு பாக்கியம் தென்னாப்பிரிக்கா அல்லது ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்றிற்கு கிடைக்க போவதே கிரிக்கெட் அரங்கில் முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இறுதி போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் .

- Advertisement 2-

இந்த டி20 உலக கோப்பைத் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத அணியாக இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இருந்து வருகிறது. அப்படி ஒரு சூழலில் தென்னாபிரிக்க அணி பற்றி சமீபத்தில் பேசியிருந்த பிராட் ஹாக், “தென்னாபிரிக்க அணி சிறப்பாக உள்ளதுடன் ஷம்சி மற்றும் மகாராஜா என இரண்டு தரமான சுழற் பந்துவீச்சாளர்களும் இருக்கின்றனர். இறுதி போட்டிக்கு முன்னேறும் தன்னம்பிக்கையுடனும் தென்னாபிரிக்க அணி விளங்கி வருகிறது.

அதனை அவர்கள் கடந்து விட்டால் சவுத் ஆப்பிரிக்கா தான் நிச்சயம் இந்த முறை டி20 உலக கோப்பை கைப்பற்ற போகிறது. பெரிய அணிகள் பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனால் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா வந்து விட்டால் எந்த அணிகளாக இருந்தாலும் வெற்றி பெற முடியாது. மேலும் அந்த அணி நல்ல கலவையாக இருப்பதுடன் மட்டுமில்லாமல் அவர்களின் ஆக்ரோஷமும் சிறப்பாக உள்ளது.

மார்க்ரமை ஒரு கேப்டனாக எனக்கு மிகவும் பிடிக்கும். போட்டியை நினைத்து பயப்படாமல் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல ஆடினாலே தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று விடும்” என ஹாக் கூறி உள்ளார்.

சற்று முன்