2023 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் அக்டோபர் ஐந்து முதல் நவம்பர் 19 வரை நடக்க உள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியை இந்தியா வென்றது. அதே சமயம் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இதற்கு முன்பாக இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து வென்றது. இப்படி எந்த நாடு போட்டியை நடத்துகிறதோ அந்த நாடு உலக கோப்பையை வெல்வது சற்று எளிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது.
இந்த நிலையில் இந்தியா தனது முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அக்டோபர் 8ஆம் தேதி எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆடவிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து உள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹாக், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பல்வேறு நெளிவு சுளிவுகள் குறித்து அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி பற்றி அவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் மிகச் சிறந்த பவுலரான மிட்சல் ஸ்டார்க் உள்ளார். அவர் புதிய பந்துகளில் விரைவாக விக்கெட்டை வீழ்த்தக் கூடியவராக இருக்கிறார். அதே சமயம் ஆடம் ஜம்பா போன்ற ஸ்பின்னரும் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். மிடில் ஓவர்களில் அவர் எதிரணியின் பேட்டிங்கை கட்டுக்குள் வைக்க கூடியவராக இருக்கிறார். அதேபோல் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களும் ஆஸ்திரேலிய அணையில் உள்ளனர்.
என்னை பொறுத்தவரை இந்திய அணியை உலக கோப்பையில் இருந்து வெளியேற்றக்கூடிய தகுதி உள்ள ஒரு அணி என்றால் அது ஆஸ்திரேலிய அணி தான். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியாகட்டும் ஆசிஷ் தொடராகட்டும், அனைத்திலும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளது.
அந்த அணி தற்போது ஒரு மிகச்சிறந்த வடிவத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் இந்திய அணி குறித்து அவர் கூறுகையில், நடுவரிசையில் இந்திய அணிகள் யார் விளையாட போகிறார்கள் என்பது இப்போது வரை தெரியவில்லை. ஷ்ரேயஸ் ஐயர் விளையாடுவாரா? கேஎல் ராகுல் பிட்டாக உள்ளாரா என்பதெல்லாம் தெரியவில்லை.
அணியில் ரிஷப்மென்ட் இல்லாத பட்சத்தில் நிச்சயம் கேல் ராகுல் இருக்க வேண்டும். அதே சமயம் ரவீந்திர ஜடேஜா அக்சர் படேலை காட்டிலும் சிறப்பாக விளையாடுகிறார். அதனால் அவர் அக்சர் படேலுக்கு முன்பாக இறங்குவது தான் சரியாக இருக்கும். சர்துல் தாக்கூர் அணியில் இருப்பாரா இருக்க மாட்டாரா என்ற கேள்வியும் எனக்குள் இருக்கிறது என்று கூறியுள்ளார் பிராட் ஹாக்.