- Advertisement -
Homeவிளையாட்டுசூப்பர்ஸ்டார்ஸ் இருந்தா மட்டும் போதாது.. இந்தியா ஃபைனல்ஸ் ஜெய்க்குறது டிராவிட் கையில தான் இருக்கு.. எச்சரித்த...

சூப்பர்ஸ்டார்ஸ் இருந்தா மட்டும் போதாது.. இந்தியா ஃபைனல்ஸ் ஜெய்க்குறது டிராவிட் கையில தான் இருக்கு.. எச்சரித்த லாரா..

- Advertisement-

கடந்த 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருந்த நிலையில், அதன் பின்னர் பல முக்கியமான தொடர்களில் இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதி போட்டி வரை முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் ஒரு முறை கூட அவர்களால், கடந்த 11 ஆண்டுகளில் ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாமல் தான் இருந்து வருகிறது.

இந்திய அணியில் பலவீனமான விஷயங்கள் மிக மிக குறைவாகவே இருந்தாலும் அவர்களை விட பலம் குறைவாக இருக்கும் பல அணிகள், எளிதாக வீழ்த்தி கோப்பையை வென்றும் வருகின்றனர். உதாரணத்திற்கு இந்திய அணி இரண்டு முறையும் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் முன்னேறி இருந்தாலும் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கோப்பையை இழந்து தவித்திருந்தனர்.

இதுபோக 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி, 2022 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி, கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் கோப்பை இறுதிப்போட்டி உள்ளிட்ட பலவற்றிலும் சில சொதப்பல்கள் காரணமாகத்தான் இந்திய அணி தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் அரிதான வாய்ப்பையும் தவற விட்டிருந்தனர்.

இப்படி அனைவருமே நன்றாக ஆடும்போதும் முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி சோக் செய்வதற்கான காரணமே தெரியாமல் பலரும் குழம்பித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய கிரிக்கெட் அணி பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement-

“வெளியில் இருந்து இதற்கு முன்பு நடந்த டி20 உலக கோப்பை, ஒரு நாள் உலக கோப்பை ஆகியவற்றை பார்க்கும்போது இந்தியாவின் இறுதி திட்டங்களில் நிறைய குறைகள் இருப்பதாகவே நான் உணர்கிறேன். உங்கள் அணியில் எத்தனை சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் உங்கள் திட்டத்தை எப்படி செயல்படுத்த போகிறீர்கள் என்பது தான் முக்கியம்.

உங்களது இன்னிங்சில் எந்த மாதிரியான திட்டங்களை வடிவமைத்து அதற்கேற்ப ஆடுகிறீர்கள் என்பது முக்கியம். இதனால் நிச்சயம் இந்த முறை ராகுல் டிராவிட் தனது அணி வீரர்களை முக்கியமான திட்டத்தில் கவனம் செலுத்த செய்து கோப்பையை வெல்வார்கள் என்றும் நான் நம்புகிறேன்” என பிரைன் லாரா கூறியுள்ளார்.

சற்று முன்