- Advertisement 3-
Homeவிளையாட்டுஎன் 400 ரன்களைத் தொடணும்னா.. இந்த 2 இந்திய வீரர்கள் நினைச்சா நடக்கும்.. ரோஹித், கோலி...

என் 400 ரன்களைத் தொடணும்னா.. இந்த 2 இந்திய வீரர்கள் நினைச்சா நடக்கும்.. ரோஹித், கோலி இல்லாம லாரா சொன்ன பெயர்..

- Advertisement-

கிரிக்கெட் போட்டிகளை பொறுத்த வரையில் எப்போதும் சில சாதனைகள் நெருங்க முடியாததாகவே இருக்கும். சச்சின் டெண்டுல்கர் சர்வதேசப் போட்டிகளில் ஏராளமான சாதனைகளை சொந்தமாக்கி வைத்துள்ள நிலையில், நிறைய ரன்கள் மற்றும் சதங்கள், அரைச் சதங்கள் உள்ளிட்டவற்றை குவித்துள்ளார். அவற்றை எல்லாம் ஒரு பக்கம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நெருங்கி வரும் வேளையில் அனைத்தையும் அவரால் முறியடித்து விட முடியுமா என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி தான்.

சச்சினை போல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஜாம்பவான்களாக இருந்து ஓய்வு பெற்றிருந்த பல வீரர்களின் சில முக்கியமான சாதனைகளும் நிச்சயம் இனி பல ஆண்டுகள் ஆனாலும் தவிர்க்கவே முடியாது என தைரியமாக கூறிவிடலாம். அந்த வகையில் பிரைன் லாராவின் முக்கியமான ஒரு சாதனை கடந்த 20 ஆண்டுகளாக யாராலும் தொட முடியாமல் இருந்து வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிரைன் லாரா 400 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

- Advertisements -

இந்த போட்டிக்கு பின்னர் ஆயிரக்கணக்கான டெஸ்ட் போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் அரங்கு பார்த்து விட்டாலும் 300-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர்கள் யாரும் 400 ரன்களைத் தொடவே இல்லை. இனி வரும் தலைமுறை வீரர்கள் அந்த சாதனையை நெருங்குவார்களா என்பது பற்றி தற்போது பிரைன் லாரா ஒரு முக்கியமான கருத்தையும் தெரிவித்துள்ளார்.

“நான் கிரிக்கெட் ஆடிய காலத்தில் எனது 400 ரன்களுக்கு சவாலாக விளங்கிய சிலர் 300 ரன்களை கடந்தும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். வீரேந்திர சேவாக், கிறிஸ் கெயில், இன்சமாம் உல் ஹக், சனத் ஜெயசூர்யா உள்ளிட்டவர்கள் தான் அவர்கள். இவர்கள் மிகுந்த ஆக்ரோச வீரர்களாகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தனர்.

- Advertisement-

ஆனால் இந்த டெஸ்டில் தற்போது எத்தனை ஆக்ரோஷமான வீரர்கள் ஆடுகின்றனர்?. இங்கிலாந்து அணியில் சாக் கிரவுலி மற்றும் ஹேரி ப்ரூக் உள்ளனர். அதே போல இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர். இவர்கள் எல்லாம் நினைத்தால் நல்ல சூழலும் அமைந்தால் நிச்சயம் எனது 400 ரன்கள் என்ற சாதனையும் முறியடித்து விடுவார்கள்.

புதிய தலைமுறை கிரிக்கெட் வீரர்களில் சுப்மன் கில் மிகுந்த திறமை வாய்ந்த வீரராக நான் பார்க்கிறேன். வரும் ஆண்டுகளில் கிரிக்கெட்டையே அவர் தனது பேட்டிங் மூலம் ஆள்வார் என நான் நம்புகிறேன் அதேபோல இன்னும் நிறைய சாதனைகளையும் அவர் முறியடித்துக் காட்டுவார்” என லாரா தெரிவித்துள்ளார்.

சற்று முன்