ஐபிஎல் போலவே பல நாடுகளில் கிரிக்கெட் லீக்குகள் நடந்து வரும் நிலையில் இப்போது அமெரிக்காவிலும் மேஜர் கிரிக்கெட் லீக் என்ற தொடர் இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ளது. இதில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் அந்த லீக்குகளிலும் அணிகளை வாங்கியுள்ளார்.
டெக்ஸாஸ் மாகாண அணியை வாங்கியுள்ள சிஎஸ்கே அதற்கு டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என பெயர் வைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சகோதர அணியான இதில் சிஎஸ்கே வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடிய டெவான் கான்வே, மிட்ச்சல் சாண்ட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு அணியான ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ஜெரால்டு கோயிட்ஸே மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆச்சரியப்பட தக்கவகையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி ஓய்வை அறிவித்த டுவெய்ன் பிராவோ மற்றும் அம்பாத்தி ராயுடு ஆகியோரும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர்.
அம்பாத்தி ராயுடு 2023 ஆம் ஆண்டு சீசனோடு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனால் அவர் இனிமேல் பிசிசிஐ விதிகளின் கீழ வரமாட்டார் என்பதால் வெளிநாட்டு தொடர்களில் விளையாடலாம். அதனால் அவரை அணியில் இணைத்துள்ளனர்.
மற்றொரு வீரரான டுவெய்ன் பிராவோ, கடந்த ஆண்டே ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் கோச்சாக இருந்து வருகிறார். இப்போது அவர் டெக்ஸாஸ் அணியில் வீரராகவும் பவுலிங் கோச்சாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரும்பாலான வீரர்கள் இருப்பதால் டெக்ஸாஸ் அணி பலம் பொருந்தியதாக உள்ளது.
இதையும் படிக்கலாமே: எல்லாத்துக்கும் காரணம் கோலி தான். நான் எதுவுமே பண்ணல. உத்தமன் போல பேசியுள்ள உல் ஹக்
ஏற்கனவே MCL-க்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கிளை அணியான எம்.ஐ. நியுயார்க் அணி பற்றிய விவரங்கள் வெளியாகின. அதில் கைரன் பொல்லார்ட் தலைமையில், டிரண்ட் போல்ட், ரஷீத் கான், டெவால்ட் பிரவிஸ், பெஹ்ரண்டார்ஃப் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல வீரர்கள் இருப்பதால் MCL லீக் ஐபிஎல் போலவே பரபரப்பான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.