பேட்டிங்கே வரல.. இஷானுக்கு கிஷனுக்கு எவ்வளவுதான் வாய்ப்பு கொடுப்பீர்கள்.. வாசிம் ஜாபர் கோபம்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரு டி20 போட்டிகளிலும் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு இந்திய அணியின் டாப் 7 பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங்கே முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. இதனால் இந்திய அணி வாழ்வா சாவா போட்டியில் இன்று களமிறங்குகிறது. இதனால் இந்தப் போட்டியை ரசிகர்கள் பலரும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் புதிய பந்துகளில் மட்டுமே ரன்கள் எளிதாக சேர்க்க முடியும். அதனை இந்திய அணியின் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடர்ந்து தவறவிடுகின்றனர். இதன் காரணமாகவே சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் அழுத்தத்துடன் களமிறங்கும் நிலை உருவாகியுள்ளது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் கடைசி 16 டி20 போட்டிகளில் இஷான் கிஷனின் ஆட்டம் கொடூரமாக அமைந்திருக்கிறது. வெறும் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் 233 ரன்களை தான் இஷான் கிஷன் சேர்த்திருக்கிறார். இதனால் இஷான் கிஷனை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து வாசிம் ஜாபர் பேசும் போது, இஷான் கிஷன் டி20 கிரிக்கெட்டில் திணறுவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். இதனால் அவருக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.

ஓய்வுக்கு பின் வரும் போது இஷான் கிஷனால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும். இஷான் கிஷனுக்கு பதிலாக இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக தேர்வு செய்யலாம். ஏனென்றால் பேட்டிங்கில் அச்சமின்றி ஜெய்ஸ்வாலால் செயல்பட முடிகிறது. அதேபோல் சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் எந்த சிரமமுமின்றி சிறப்பாக விளையாடும் திறமை உள்ளது.

- Advertisement -

பேட்டின் ஃபார்மின் உச்சத்தில் இருக்கும் போது ஏன் அவருக்கு வாய்ப்பு வழங்க கூடாது. என்னை பொறுத்தவரை யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அணியில் கொண்டு வர இதுதான் சரியான நேரம். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் ஏற்கனவே ரன்கள் சேர்த்து நிரூபித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணிக்குள் வரும் பட்சத்தில் இடதுகை – வலதுகை தொடக்க கூட்டணி சிதையாமல், சஞ்சு சாம்சனின் விக்கெட் கீப்பிங் திறமையும் பரிசோதிக்கப்படும். அதேபோல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 கிரிக்கெட்டை எப்படி அணுகுவார் என்ற கேள்விக்கும் பதில் கிடைக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்