- Advertisement -
Homeவிளையாட்டுவாழ்த்து சொன்னவங்கள இப்படியா கலாய்க்குறது.. முகத்துக்கு நேராவே பும்ரா செஞ்ச சம்பவம்...

வாழ்த்து சொன்னவங்கள இப்படியா கலாய்க்குறது.. முகத்துக்கு நேராவே பும்ரா செஞ்ச சம்பவம்…

- Advertisement-

காயத்தால் ஒரு சில முறை அவதிப்பட்ட போது கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தவர் கிரிக்கெட் அரங்கின் நம்பர் 1 பவுலர் ஜஸ்பிரிட் பும்ரா. யார்க்கர் கிங் என புகழப்படும் இவர் தன் முன்பு இருந்த தடைகளைக் கடந்து தொடர்ந்து பல தொடர்களில் இந்திய அணியின் தூணாக இருந்து வருகிறார். தனது நிலை எப்படி இருந்தாலும் அதை எல்லாம் கடந்து அணிக்காக பந்து வீசி விக்கெட்டுகளை எடுப்பதை முன்னுரிமையாக கொண்டுள்ள பும்ரா, சமீபத்தில் நடந்த டெஸ்டிலும் பட்டையைக் கிளப்பி இருந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சுழலுக்கு அதிகம் சாதகம் இருந்த பிட்ச்சில் தனியொரு ஆளாக சம்பவம் செய்த பும்ரா, யார்க்கர் பந்துகளால் மிரள வைத்திருந்தார். அதிலும் ஒல்லி போப் விக்கெட்டை பும்ரா வீழ்த்திய விதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பந்துகளில் ஒன்று என்றும் பலரால் பாராட்டப்பட்டிருந்தது.

இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த பும்ரா, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததுடன் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார். இந்திய மண்ணில் மட்டுமில்லாமல், வெளிநாட்டு மைதானங்களிலும் கூட எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பும்ரா, தற்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சில முக்கியமான சாதனைகளை படைத்து கவனம் ஈர்த்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் பும்ரா. இதன் மூலம், டெஸ்டில் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். அது மட்டுமில்லாமல், டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தில் இருந்த முதல் பந்து வீச்சாளராகவும் புதிய சகாப்தம் ஒன்றை அவர் தொடங்கி வைத்துள்ளார்.

- Advertisement-

இப்படி அடுத்தடுத்து பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகி உள்ள பும்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தான் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது. நம்பர் 1 பந்து வீச்சாளராக உயர்ந்துள்ள பும்ராவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தனக்கு கிடைத்த பாராட்டுக்கள் பற்றி சூசகமாக கலாய்த்து தான் ஒரு மீம் ஒன்றை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பும்ரா பகிர்ந்துள்ளார். அதில் மேலே இருக்கும் புகைப்படத்தில் ஆதரவு என குறிப்பிடப்பட்டு மைதானத்தின் ஒரு பக்கத்தில் ஒரே ஒரு நபர் மட்டுமே இருக்கும் புகைப்படம் உள்ளது. அதன் கீழே தனக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள் என மைதானம் நிரம்பி வழியும் புகைப்படமும் உள்ளது.

இதன் மூலம், தனக்கு கிடைக்கும் ஆதரவு குறைவாக இருப்பதாகவும், ஆனால் சாதனை படைத்த பின்னர் அவருக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள் அதிகமாக இருப்பதையும் ஒப்பிட்டு தனது கருத்தை மறைமுகமாக பும்ரா வெளியிட்டுள்ளார்.

சற்று முன்