- Advertisement 3-
Homeவிளையாட்டுஐபிஎல் ஹிஸ்டரில இப்படி நடந்ததே இல்ல.. ஆர்சிபிக்கு எதிரா சரித்திரம் படைத்து காட்டிய பும்ரா..

ஐபிஎல் ஹிஸ்டரில இப்படி நடந்ததே இல்ல.. ஆர்சிபிக்கு எதிரா சரித்திரம் படைத்து காட்டிய பும்ரா..

- Advertisement 1-

நடப்பு ஐபிஎல் தொடரின் 25 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்த தொடரை பொருத்தவரையில் குறிப்பிட்ட சில அணிகள் மோதும் போது ரசிகர்களே யுத்தத்திற்கு தயாராவது போல ஆயத்தம் ஆகி கொண்டிருப்பார்கள். அந்த வகையில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போது எந்த அளவுக்கு ஒரு விறுவிறுப்பு இருக்குமோ அதே போல மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதும் போதும் மைதானத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு பரபரப்பாக தான் இருக்கும்.

அதே போல இன்றைய போட்டிக்கு முன்பாக விராட் கோலி மற்றும் பும்ரா இடையேயான போட்டி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் உருவாக்கி இருந்தனர். அப்படி ஒரு சூழலில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய அதன்படி ஆடிய மும்பை பெங்களூரு அணியில் தொடக்க வீரர் கோலி மூன்று ரன்களில் பும்ரா பந்து வீச்சில் அவுட் ஆனார். மறுபுறம் பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் இந்த தொடரில் இதுவரை ஒரு முறை கூட அரைச்சதம் அடிக்காத நிலையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார்.

அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய இளம் வீரர் ராஜத் படிதார் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டூப்ளசிஸ் 61 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடாத மேக்ஸ்வெல் மீண்டும் ஒருமுறை டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 180 ரன்கள் வரை பெங்களூர் அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து ஃபோர்களுடன் 53 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி மும்பை அணி ஆடிவரும் நிலையில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒரு முக்கியமான சாதனையை ஐபிஎல் வரலாற்றில் பதித்துள்ளார். இந்த தொடரில் மும்பை அணிக்காக மிகச் சிறப்பாக பந்து வீசி வரும் பும்ரா, பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

- Advertisement 2-

ஐபிஎல் தொடரில் அவரது இரண்டாவது ஐந்து விக்கெட்டாக இது அமைந்துள்ள நிலையில், மும்பை அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் மிக சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார். அப்படி இருக்கையில் தான் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஒரு பந்து வீச்சாளர் ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ள பெருமையும் தற்போது பும்ரா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆஷிஷ் நெஹ்ரா ஆடிய போது 10 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது தான் ஆர்சிபி அணிக்கு எதிராக சிறந்த பவுலிங்காக இருந்தது. அதனை கடந்து பும்ரா வரலாறு படைத்துள்ளார்.

சற்று முன்