- Advertisement 3-
Homeவிளையாட்டுஅப்பாடா இப்பவாவது ஒரு நல்ல செய்தி வந்துச்சே. இந்திய அணிக்கு திரும்பும் பும்ரா. எப்ப தெரியுமா?

அப்பாடா இப்பவாவது ஒரு நல்ல செய்தி வந்துச்சே. இந்திய அணிக்கு திரும்பும் பும்ரா. எப்ப தெரியுமா?

- Advertisement 1-

இந்திய பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பான பும்ரா கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவர் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. கடைசியாக அவர் ஆஸி அணிக்கு எதிரான டி 20 போட்டிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் விளையாடினார். தொடருக்கு இடையே அவருக்கு மீண்டும் முதுகுவலி பிரச்சனை எழ, பாதியிலேயே விலகினார்.

அவரின் முதுகுப் பகுதி காயம் முழுவதும் குணமாவதற்கு முன்பே அவரை விளையாட வைத்ததால், காயத்தின் தீவிரத்தன்மை அதிகமாகி, அவர் இவ்வளவு மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவானதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது அவர் விஷயத்தில் பிசிசிஐ பொறுமையாக விஷயங்களைக் கையாளுகிறது.

காயம் காரணமாக கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பை தொடர் , ஐபிஎல் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆகிய முக்கியமான தொடர்களை பூம்ரா இழந்துள்ளார். இது அவருக்கு மட்டும் இழப்பாக இல்லாமல் இந்திய அணிக்கும் இழப்பாக இருந்தது. இதில் எந்த தொடரையும் இந்திய அணி வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தியின் படி இரண்டு முக்கியமான ஒயிட்-பால் போட்டிகளுக்கு முன் அயர்லாந்து தொடரின் போது பும்ரா இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியா, அயர்லாந்துக்கு எதிராக மூன்று T20I போட்டிகளைத் தொடர்ந்து செப்டம்பரில் ஆசியக் கோப்பையில் விளையாடுகிறது. அதன் பிறகு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் கவனம் செலுத்துகிறது.

- Advertisement 2-

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளஎர்களின் உடல்தகுதியைக் கண்காணிக்கும் பிசிசிஐ அதிகாரியி ஒருவரின் கூற்றுப்படி, அயர்லாந்து தொடருக்கு பும்ரா திரும்புவதற்கான அறிகுறிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது இந்திய கிரிக்கெட்டும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தியாக அமைந்துள்ளது.

இதையும் படிக்கலாமே: மைதானத்துக்குள் ஓடிவந்து ரசிகர் செய்த செயலால் ஸ்தம்பித்து போன ருத்துராஜ் – தோனியின் சிஷ்யன்னா சும்மாவா என சிலிர்க்கும் சிஎஸ்கே ஃபேன்ஸ்

வெளியாகியுள்ள தகவலின் படி “ஜஸ்பிரித் பும்ரா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து தொடரில் விளையாட தயாராக இருக்கிறார். இது இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் மற்றும் நீண்ட கால ஓய்வுக்குப் பிறகு பும்ராவை களத்தில் அனுமதிக்கும். எல்லாம் சரியாக இருந்தால், பும்ரா சிறந்த உடற்தகுதியோடு களமிறங்க வாய்ப்புள்ளது,” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சற்று முன்