Homeகிரிக்கெட்வீரர்களுக்கு காய்ச்சல்... உ.கோ அணியில் மாற்றம்? அஸ்வின் உள்ளே வருகிறாரா? - ரோகித் வெளியிட்ட அதிரடி...

வீரர்களுக்கு காய்ச்சல்… உ.கோ அணியில் மாற்றம்? அஸ்வின் உள்ளே வருகிறாரா? – ரோகித் வெளியிட்ட அதிரடி தகவல்

-Advertisement-

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய அணியின் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தாலும், நட்சத்திர வீரர்கள் களமிறங்கும் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை அணியை உறுதி செய்ய நாளை கடைசி நாள் என்பதால், இன்றைய ஆட்டம் உலகக்கோப்பை அணியிலும் எதிரொலிக்கும் என்று பார்க்கப்படுகிறது. குறிப்பாக காயமடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக இந்திய அணியில் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

-Advertisement-

இதுகுறித்து ரோகித் சர்மா பேசும் போது, எந்தவொரு வீரரிடம் இருந்தும் கிளாஸ் மற்றும் அனுபவத்தை தட்டிப்பறித்துவிட முடியாது. கடந்த இரு போட்டிகளிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்படி பவுலிங் செய்தார் என்பதை அனைவரும் பார்த்தோம். அஸ்வினிடம் எண்ணற்ற வேரியேஷன்கள் உள்ளன. ஒருவேளை அக்சர் படேலால் காயத்தில் இருந்து குணமடையவில்லை என்றால், நிச்சயம் மாற்று வீரராக அஸ்வின் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

தற்போதைய சூழலில் இந்திய அணியில் ஏராளமான பேக் அப் வீரர்களும் ஃபார்மில் உள்ளனர். அவர்களுக்கான ஆட்ட நேரம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நன்றாக விளையாடி இருக்கிறார்கள். அதனால் திட்டங்கள் நிறைவேறியதில் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது இந்திய அணியில் 13 வீரர்கள் இருக்கிறார்கள்.

-Advertisement-

சில வீரர்களுக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் வீரர்களிடையே சில பிரச்சனைகள் உள்ளன. உலகக்கோப்பை தொடர் மிகவும் நீண்ட தொடராக உள்ளது. அதனால் வீரர்களின் மனநிலையும் முக்கியம் என்று நினைக்கிறேன். அதன் காரணமாகவே வீரர்களை வீட்டுக்கு அனுப்பி ஓய்விடுக்க வலியுறுத்துகிறோம். உலகக்கோப்பைக்கு முன் அனைவரும் புத்துணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே விருப்பம் என்று கூறியுள்ளார்.

அக்சர் படேலின் காயம் குறித்து எந்த விளக்கமும் இதுவரை இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து வெளியிடப்படவில்லை. இதனால் நாளை இந்திய அணி உறுதி செய்யப்படும் போது அஸ்வினின் பெயர் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-Advertisement-

சற்று முன்