- Advertisement 3-
Homeவிளையாட்டுஆர்சிபி எடுத்த முடிவால் கடுப்பான சாஹல்.. கடைசி நிமிடத்தில் சொதப்பிய கோலியின் பிளான்?..

ஆர்சிபி எடுத்த முடிவால் கடுப்பான சாஹல்.. கடைசி நிமிடத்தில் சொதப்பிய கோலியின் பிளான்?..

- Advertisement 1-

பொதுவாக ஐபிஎல் தொடர்களில் ஒரு தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக எப்போதுமே மினி ஏலம் நடைபெறும். இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒரு அணி தங்களிடம் இடம் பெற்றுள்ள வீரர்களில் மூன்று அல்லது நான்கு பேரை தான் சில விதிகளுக்கு உட்பட்டு தக்க வைத்துக்கொள்ள முடியும். இதனால் மற்ற வீரர்கள் அனைவரையுமே வெளியேற்ற வேண்டும் என்ற சூழலில், அந்த அணிக்காக தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் சில வீரர்களையும் வெளியே வைக்க வேண்டிய இக்கட்டான சூழலும் உருவாகும்.

அப்படி சில வீரர்களை வெளியேற்றி அந்த அணி எடுக்கும் முடிவு ரசிகர்கள் உள்ளிட்டோருக்கும் கடும் அதிருப்தியைத் தான் ஏற்படுத்தும். அந்த வகையில் சில சீசன்களுக்கு முன்பாக பெங்களூர் அணியில் இடம் பெற்றிருந்த சாஹலை அவர்கள் விடுவித்திருந்தது பெரிய அளவில் அந்த சமயத்தில் ரசிகர்களை கடுப்பாக்கி இருந்தது. ஆர்சிபி அணிக்காக பலரும் விக்கெட் எடுக்கத் தடுமாறிய போதிலும், தனி ஆளாக விக்கெட் எடுத்து அசத்தியிருந்தவர் சாஹல்.

அப்படி இருந்தும் மற்றவர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சாஹலை விடுவிக்க வேண்டும் என்ற நிலையும் உருவானது. இதன் பின்னர் ஆர்சிபி அணி அவரை ஏலத்திலும் எடுக்காமல் போக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை சொந்தமாக்கி கொண்டதுடன் மட்டுமில்லாமல் மிகச் சிறப்பாகவும் அவரை பயன்படுத்தி வருகிறது.

ராஜஸ்தான் அணிக்காக சாஹல் விக்கெட்டை எடுக்கும் போதெல்லாம் ஆர்சிபி ரசிகர்கள் மிகவும் மனமடைந்து தான் போவார்கள். இந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணத்தினால் அவரை வெளியேற்றியதாக ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹசன் தெரிவித்துள்ளார். “ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக மூன்று பேர்களை தக்க வைத்துக்கொண்டு சாஹல் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரை ஏலத்தில் எடுத்து விடலாம் என்று தான் அணியில் இருந்து விடுத்தோம்.

- Advertisement 2-

ஆனால் ஏலத்தில் சாஹல் 65 வது வீரராக இருந்ததால் எங்களை விட பல அணிகளும் பணம் அதிகம் வைத்திருந்ததால் நாங்கள் அந்த அளவுக்கு எந்த பந்துவீச்சாளரையும் எடுக்காமல் இருந்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. சாஹலை எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டும் திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

சாஹல் கிடைக்காமல் போனால், ஹசரங்காவை எடுக்க வேண்டும் என திட்டங்களை வகுத்து அதில் வெற்றியும் கண்டிருந்தோம். ஆர்சிபி அணியில் இருந்து சாஹல் விலகியதன் பின்னர் அவரிடம் நான் இது பற்றி பேசியிருந்தேன். ஆனால் ஆர்சிபியனாக இருந்தவர், அதிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் தான் எங்கள் முடிவு ஏற்படுத்தி இருந்தது” என மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

சற்று முன்