- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி, ரோகித் எல்லாம் கிடையாது.. இப்போதைக்கு இவர் தான் டாப்.. மனுஷன் பின்றாரு.. பாத்து கத்துக்கணும்...

கோலி, ரோகித் எல்லாம் கிடையாது.. இப்போதைக்கு இவர் தான் டாப்.. மனுஷன் பின்றாரு.. பாத்து கத்துக்கணும் – இலங்கை ஜாம்பவான் பேச்சு

- Advertisement 1-

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது சிறந்த வீரர்கள் யார் என்ற பட்டிமன்றம் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. இதில் பலரும் விராட் கோலியை தான் தங்களுடைய தேர்வாக சொல்வார்கள்.

ஆனால் விராட் கோலி கடந்த சில காலமாக ஃபார்மில் இல்லாததால் பலரும் தங்களுக்கு பிடித்தமான வீரர்களை சொல்லி வந்தார்கள். இந்த நிலையில் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி சதங்களாக அடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தான் தற்போது உள்ள சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சமிந்தா வாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் லங்கா பிரீமியர் லீக் தொடரில் கொழும்பு அனிக்காக பாபர் அசாம் விளையாடுகிறார். ஆனால் இந்த தொடரில் நான் வெறும் பேட்ஸ்மேன் ஆக தான் விளையாடுவேன் என்று கூறியிருந்தார். பாபர் அசாம் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement 2-

அவர் விளையாடும் விதம் எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. அவரிடம் இளம் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும். பாபர் அசாம் போன்ற வீரர்கள் லங்கா பிரீமியர் தொடரில் விளையாடுவது மிகவும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. என்னைக் கேட்டால் தற்போது பாபர் அசாம் தான் டாப் வீரராக இருக்கிறார்.

இதேபோன்று நசிம் , மதீசா பதிராணா போன்ற வீரர்கள் எல்லாம் லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவது இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும். பல வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் விளையாட தொடங்கி இருக்கிறார்கள் தற்போது இரண்டு சீசன்கள் தான் முடிந்திருக்கிறது.

இதை வைத்து லங்கா பிரீமியர் லீக் தொடர் வெற்றி பெறுமா இல்லையா என்பதை நாம் கணிக்க முடியாது. விராட் கோலி சிறந்த வீரர் தான். அவர் கடந்த காலங்களில் அபாரமாக விளையாடியதால் அவர் மீது எப்போதுமே எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால் அவர் ஏதேனும் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவரை பலரும் குறை கூற தொடங்கி விடுகிறார்கள் என்று ஜமிந்தாவாஸ் கூறியுள்ளார்.

சற்று முன்