IPL 2023 : பிளே ஆப் சுற்றில் சி.எஸ்.கே அணியை தாண்டி 2 ஆம் இடம் பிடிக்க மும்பை அணிக்கு வாய்ப்பு? – எப்படி தெரியுமா?

- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக முன்னேற்றத்தை கண்டு வருவதால் முதல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தை பிடிப்பது கூட அவர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடரின் ஆரம்பத்தில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது துவக்கத்தில் வழக்கம்போல் தடுமாறியது.

ஆனால் அதன் பின்னர் இளம் வீரர்களான திலக் வர்மா, ஆகாஷ் மத்வால், நேஹல் வதேரா போன்ற கலவையான திறமையான வீரர்களை அணியில் இணைத்து தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மே 12ஆம் தேதி நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் அவர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையும் கிடைத்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் நடப்பு சாம்பியனும், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியை வீழ்த்துவது எளிதல்ல. ஆனாலும் அவர்களை வீழ்த்தி அசாத்தியமான திறனை தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வெளிக்காட்டி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சூரியகுமார் யாதவ் அட்டகாசமான பார்மிற்கு திரும்பியுள்ளார். அதேபோன்று துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷனும் அதிரடி காட்டுவதால் தற்போது மெல்ல மெல்ல மும்பை அணி தங்களது ஆதிக்கத்தை இந்த தொடரில் வெளிக்காட்டி வருகிறது.

அதே போன்று இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் எதிர்கொள்ள உள்ள இரண்டு ஆட்டங்களில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட அவர்கள் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்வார்கள். அதோடு 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் சி.எஸ்.கே அணியை பின்னுக்கு தள்ளி முதல் இரண்டு இடங்களில் ஒன்றை பிடிக்கக்கூட அருமையான வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

- Advertisement -

மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் சிஎஸ்கே அணி தோற்றால் கூட 17 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். ஆனால் தற்போது மும்பை அணி உள்ள பார்மிற்கு எதிர்வரும் போட்டிகளில் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளை எதிர்கொள்ள உள்ளதால் அந்த இரு அணிகளையும் மும்பை அணி எளிதாக வீழ்த்த நேரிடும். அப்படி மும்பை அணி அவர்களை எளிதில் தோற்கடித்தால் 18 புள்ளிகள் பிடித்து சென்னை அணியை அவர்கள் பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தையும் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே இந்த சீசனில் மும்பை அணியின் பிளே ஆப் வாய்ப்பு தற்போதே உறுதி என்று நாம் கூறலாம். அதோடு சி.எஸ்.கே அணி ஒரு போட்டியில் தோற்று சிறிய சறுக்கலை சந்தித்தால் கூட மும்பை அணி எதிர்வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று சென்னை அணியை பின்னுக்குத் தள்ளவும் அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்