பல நாட்கள் ஐபிஎல் ரசிகர்கள் காத்திருந்த மிக முக்கியமான ஒரு அறிவிப்பு தற்போது அனைத்து அணிகளின் சார்பிலும் வெளியிடப்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என மொத்தம் பத்து அணிகள் தாங்கள் தக்கவைத்து கொள்ளப் போகும் வீரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. நவம்பர் மாத இறுதியில் சவுதியில் வைத்து ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் இதற்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வந்தது.
மேலும் தோனி, ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் என ஐபிஎல் தொடரில் பெரிய தலைகள் பலரும் தாங்கள் ஆடி வந்த அணிகளுக்கு தொடர்ந்து ஆடுவார்களா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது அவை அனைத்திற்குமே விடை கிடைத்துள்ளது.
முன்னதாக கே எல் ராகுல் லக்னோ அணியில் தொடர மாட்டார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை உறுதியாக்கும் வகையில், நிகோலஸ் பூரனை 21 கோடி ரூபாய்க்கு லக்னோ தக்க வைத்துள்ளதால் அவரே கேப்டனாக செயல்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதே போல ரோஹித் ஷர்மாவும் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்வாரா மாட்டாரா என்ற கேள்வி அதிகம் இருந்தது.
அதற்கும் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி பதில் சொல்ல, அதே அணியில் அவர் தொடர்ந்து ஆடுவதும் உறுதியாகி உள்ளது. இதற்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 5 பேரை தக்க வைத்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தோனி, ருத்துராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் பதிரானா ஆகிய ஐந்து பேரை சிஎஸ்கே அணி தக்க வைத்துள்ளது. இதில் தோனி Uncapped வீரர் அடிப்படையில் 4 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த பட்டியலை சிஎஸ்கே அணி அறிவிக்க ஒரு அசத்தலான வீடியோவை பகிர்ந்திருந்தது.
அதன்படி, இசையமைப்பாளர் அனிருத்தின் ஸ்டூடியோவில் இந்த பட்டியல் கொடுக்கப்பட, அதற்கு அவரது இசையமைப்பில் பாடல்களின் பின்னணி ஒலிக்கப்படுகிறது. இதில் கடைசியாக வரும் தோனிக்கு ஜெய்லரில் வரும் ஹுக்கும் பாடல் வருவது ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அடுத்த ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள சூழலில் அதனை கோப்பையை வென்று விடைபெற வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
Superfans, here's your Diwali Parisu! 🎁💥
An @anirudhofficial Musical ft. IPL Retentions 2025 🥳🎶
#UngalAnbuden #WhistlePodu 🦁💛 pic.twitter.com/FGTXm52v74
— Chennai Super Kings (@ChennaiIPL) October 31, 2024