- Advertisement 3-
Homeவிளையாட்டுIND vs AUS : களத்துல கோலி என்கிட்டே இதை தான் சொன்னாரு... எனக்கு அதுல...

IND vs AUS : களத்துல கோலி என்கிட்டே இதை தான் சொன்னாரு… எனக்கு அதுல வருத்தம் இல்ல – வெற்றிக்கு பின் கேஎல் ராகுல் பேச்சு

- Advertisement 1-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனபின்னர் களமிறங்கிய இந்திய அணியில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணியின் ரோகித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் இந்திய அணியின் விராட் கோலி – கேஎல் ராகுல் இணைந்து இந்திய அணியை மீட்டெடுத்தனர். இறுதியாக இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 97* ரன்களும், விராட் கோலி 85 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றிக்கு பின் கேஎல் ராகுல் பேசும் போது, இடைவேளையின் போது நன்றாக குளித்தேன். அது போதுமான பிரேக்காக அமைந்தது. களத்திற்கு வந்த பின் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை போல் அணுகலாம் என்று கூறினார். ஏனென்றால் அப்போது பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது.

புதிய பந்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், பின்னர் ஸ்பின்னர்களுக்கும் பிட்ச் உதவியாக இருந்தது. ஆனால் 15 முதல் 20 ஓவர்கள் வரை கொஞ்சம் பனிப்பொழிவு இருந்தது. அதனால் பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக இருந்தது. அப்போது ரன் ஸ்கோரிங்கை கொஞ்சம் வேகப்படுத்தினோம். அதேபோல் பந்தும் நன்றாக ஸ்கிட்டாகி வந்தது. இந்த பிட்சை பொறுத்த வரை எளிதாக பேட்டிங்கும் செய்ய முடியாது.

- Advertisement 2-

இது பிளாட் பிட்சும் கிடையாது. என்னை பொறுத்தவரை இதுவொரு மிகச்சிறந்த விக்கெட் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பேட்ஸ்மேன்களுக்கும், பவுலர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது. தென்னாந்தியாவில் இப்படிதான் பிட்ச்கள் அமைக்கப்படும். குறிப்பாக சென்னையில் இப்படிதான் பிட்ச் இருக்கும் என்பது நன்றாக தெரியும். கடைசியாக சிக்சர் அடித்தபின் அமர்ந்ததற்கு காரணம் உள்ளது.

நான் சதம் அடிக்கலாம் என்று நினைத்து, பவுண்டரி மற்றும் சிக்ஸ் விளாச வேண்டும் என்று கணக்கிட்டு இருந்தேன். ஆனால் அந்த பந்தில் நான் அடித்த ஷாட் நல்ல டைமிங்கில் இருந்துவிட்டது. ஆனால் சதம் அடிக்க முடியவில்லை. அதற்காக எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்