- Advertisement -
Homeவிளையாட்டுதோனி மாஸ் என்ட்ரி வீடியோ - இந்த முறை ரஜினி பாடல் இல்லை… ஆனாலும் ஒலித்த...

தோனி மாஸ் என்ட்ரி வீடியோ – இந்த முறை ரஜினி பாடல் இல்லை… ஆனாலும் ஒலித்த தரமான பாடல்!

- Advertisement-

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய 61 ஆவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்தது.  சேப்பாக்கத்தில் இந்த ஆண்டு நடக்கும் கடைசி லீக் போட்டி என்பதால் மைதானம் முழுவதையும் சிஎஸ்கே ரசிகர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.

தோனி இந்த சீசன் முடிந்ததும் ஓய்வு பெற்றுவிடுவார் என பலரும் கூறிவருவதால் அவருக்கு பிரம்மாண்டமான பிரியாவிடைக் கொடுக்க வேண்டுமென சிஎஸ்கே அணி போட்டிகள் நடக்கும் மைதானங்கள் எதுவாக இருந்தாலும், மஞ்சள் படையினர் தோனிக்காக வந்து அவர் பேட் செய்ய வரும் போது ஆக்ரோஷமான வரவேற்பை அளித்து, அவர் பேட் செய்யும் போது செல்போன் டார்ச் லைட்களை ஒளிக்கவிட்டு அவரை உற்சாகப்படுத்துகின்றனர்.

இதனால் அவர் விளையாட வரும்போதெல்லாம் மாஸ் ஆன பாடல்களை ஒலிபரப்பி ரசிகர்களை மேலும் உத்வேகப்படுத்தி வருகின்றனர். கடந்த சில முறைகள் அவர் பேட் செய்ய வரும் ரஜினிகாந்தின் பாடல்களை சேப்பாக்கம் மைதானத்தில் ஒளிபரப்பினர்.

நேற்று அவர் களத்திற்கு வரும்போது என்ன பாடல் ஒலிபரப்பப்படும் என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர். கடைசி 2 பந்துகள் மட்டுமே இருக்கும் போது அவர் களத்துக்கு வர, அப்போது விஸவரூபம் படத்தில் இடம்பெற்ற “இவன் யாரென்று தெரிகிறதா” பாடலை ஒலிபரப்ப, ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் மொமண்ட்டாக அது அமைந்தது.

- Advertisement-

தற்போது ஐபிஎல் விளையாடும் வீரர்களில் மூத்த வீரராக தோனிதான் உள்ளார். அதுமட்டுமில்லாமல் 41 வயதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவர் கேப்டனாகவும் வழிநடத்தி வருகிறார். சி.எஸ்.கே. அணி இந்தமுறை அவர் தலைமையில் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பில் பிரகாசமாக நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சறுக்கலாக நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இரண்டு இடங்களைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் குறைந்துள்ளன. கிட்டத்தட்ட 61 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் ப்ளே ஆஃப் செல்ல ஒரு அணி கூட தகுதி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்